பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4- ம் அதிகாரம்:—
செங்குட்டுவன் காலத்து
இரண்டு சரித நிகழ்ச்சிகள் :


செங்குட்டுவனது நீடித்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த விசேடங்களுள்ளே, இரண்டு சரிதங்கள் முக்கியமானவை. அவை, கோவலன் கண்ணகிகளைப் பற்றியதும், கோவலனுடைய கணிகைமகள் மணிமேகலையைப் பற்றியதுமாம். இவ்விருவர் சரிதங்களில், முன்னதைச் செங்குட்டுவன் சகோதரரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரமென்ற காவியத்தாலும், பின்னதை அவ்வடிகள் காலத்துப் புலவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையென்ற காவியத்தாலும் மிக வழகாகப் பாடியிருக்கின்றனர். இவ்விரண்டு நூல்களும் அகவற்பாவில் தனித்தனி முப்பது காதைகளுடையனவாக அமைந்துள்ளன. இவற்றிற்கண்ட அவ்விருவர் சரித்திரச் சுருக்கங்களும் அடியில் வருமாறு:—

I . கோவலன் கண்ணகிகள் வரலாறு.

சோணாட்டில், காவிரி கடலொடு கலக்குமிடத்தமைந்ததும் சோழரது பழைய இராஜதானியுமாகிய புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர்தலைவனாகிய மாசாத்துவான் என்பவன் தன்மகன் கோவலனுக்கு, மாநாய்கன் என்ற வணிகன் மகள் கண்ணகியை மணம்புரிவித்துத் தனிமாளிகையில் அவர்களை வாழ்ந்துவரும்படி செய்ய, அவர்களும்