பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை.

49



“சிறுகுடியீரே! சிறுகுடி யீரே!
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
நிறங்கிள ரருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை யெடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறு மின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை யிழந்த நங்கைக்குப்

பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

என்று ஆர்ப்பரித்தெழுந்து, மலைநாட்டு முறைப்படி, குரவைக்கூத்தாடியும், அதற்குரிய பாடல்களைப்பாடியும் பெருஞ் சிறப்புச் செய்தார்கள். இங்கு இங்ஙனம் நிகழ்ந்தது.


2. காட்சிக்காதை.
கண்ணகியின் வரலாற்றிந்த செங்குட்டுவன், பத்தினிக்குப்
படிவஞ் சமைத்தற்கு இமயத்தினின்று கல்லெடுத்துவர எண்ணியது.


இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் தோன்றலாகிய செங்குட்டுவன் வஞ்சியிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடம் என்ற மாளிகையில் தன்தேவி இளங்கோவேண்மாளுடன்[1] வசித்து


  1. ‘இளங்கோ வேண்மாளுடனிருந் தருளி’ எனவரும் மூலத்துக்கு அரும்பதவுரையாசிரியர் “இளங்கோவேண்மாள்- பெயர்; நன் னன் வேண்மாள், உதியன் வேண்மாள் என்பது போல ; வேண்மாளுட னிருந்து இளங்கோவை அருளப்பாடிட்டு என்றுமாம்.” என்றெழுதினார். இதனால், தம்பி இளங்கோவடிகளுடனும், மனைவி வேண்மாளுடனும் செங்குட்டுவனிருந்தான் என்று அத்தொடர்க்கு உரை கூறுவதும் அவ்வுரையாசிரியர் கருத்தாதல் விளங்கும். இளங்கோவடிகள், தம் தமயனுடன் தங்கியிருந்தவரென்பது, பதிகத்தாலும் தெரிதலால் பிற்கூறியதும் பொருந்துவதேயாம்.

4