உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை.

61

அன்னோர்க்கெல்லாம் வேண்டிய அணிகலன்களைச் சம்மானித்துச் சோர்பெருமான் வீற்றிருந்தான். அந்நிலையில் வாயில் காவலன் செங்குட்டுவன் திருமுன் வந்துநின்று, “அரசே ! நாடகமகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் (வாத்தியகாரர்) இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறுவகைப் பாசண்டநூல்களில் வல்ல நகைவிளைத்து மகிழச்செய்யும் வேழம்பர் நூற்றுவரும், நூறுதேர்களும், ஐந்நூறுகளிறுகளும், பதினாயிரம் குதிரைகளும், இன்னின்னசரக்கென்று எழுதப்பட்டு, யாத்திரைக்கு வேண்டிய பண்டங்கள் ஏற்றப்பட்ட சகடங்கள் இருபதினாயிரமும், தலைப்பாகையுஞ்சட்டையுந் தரித்தவர்களும் சஞ்சயன் என்பவனைத் தலைமையாகக் கொண்டவர்களுமான கருமத்தலைவர் ஆயிரவரும் நின் வாயிற்கண்ணே வந்து காத்திருக்கின்றார்கள், அறிந்தருள்க” என்றான். எனலும் “அவர்களுள்ளே, சஞ்சயனுடன் நாடக மகளிரும் கஞ்சுகமுதல்வரும் (கருமத்தலைவர்), குயிலுவரும் இங்கு வரக்கடவர்’ என்று அரசன் ஆணையிட, அன்னோருடன் அத்தூதர் தலைவன் அரசவை புகுந்து செங்குட்டுவனை வணங்கி, உடன்வந்தவரையெல்லாம் அரசனுக்கு முறைப் படிகாட்டிப் பின்னர், “தேவரீர் வடநாடு செல்வது பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய சிலையொன்றன் பொருட்டேயாயின், ‘இமயமலையிற் கல்லெடுப்பித்துக் கங்கையாற்றில் அதனை நீர்ப்படை செய்துதர யாங்களே வல்லோம்’ என்று, தேவரீருடன் வேற்றுமையின்றிக் கலந்த நட்பரசராகிய நூற்றுவர்கன்னர் தெரிவித்திருக்கின்றனர்” என்றறிவித்து வாழ்த்தி நின்றனன். இது கேட்ட செங்குட்டுவன் ‘நன்று, வடநாட்டரசனான பாலகுமரன் மக்களாகிய கனகன் விசய-