பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சேரன்-செங்குட்டுவன்

னென்ற இருவரும் தம் நாக்களைக் காவாதவராய், விருந்தொன்றிலே வடவரசர் பலருடன்கூடித் தமிழ் வேந்தரான எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்துரையாடினராம்; அதனால் பத்தினிக்குக் கல்லெடுப்பித்தலோடு அவரிடம் நம்மாற்றலைக் காண்பிப்பதற்காகவும் இச்சேனை சீற்றத்தொடுஞ் செல்லா நின்றது; இச்செய்தியை நம் நட்பினராகிய அக்கன்னர்க்குத் தெரிவித்து, ஆங்குக் கங்கைப்பேரியாற்றை நம் சேனைகள் கடப்பதற்கு வேண்டிய மரக்கலங்களை அவருதவியால் சித் தஞ் செய்வதற்கு நீ முன்னர்ச் செல்லக்கடவாய்” என்று செங்குட்டுவன் கற்பனை செய்ய, சஞ்சயனும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு முற்படப்போயினன். அவன் போனதும், பேசுதலில் வல்ல கஞ்சுகமுதல்வர், அரசன் முன்னர்ப் பாண்டியரிட்ட சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கொண்டு வந்து நின்றனர். இவர்க்கு அரசன் தன் இலச்சினையிட்ட திருமுகங்களைக் கண்ணெழுத்தாளரைக்கொண்டு[1] எழுதுவித்து அத்தூதர்கள் கையிற்கொடுத்து அரசரிடம் அவற்றை முறைப்படி சேர்ப்பிக்குமாறு ஆணையிட்டு அவர்களையும் அனுப்பினன். அவர்களெல்லாம் போயின பின்னர், சேரர் பெருமான், மற்றைய மன்னர் தன் பெருமையை ஏத்தும்படி தன்னுடைய பெரும்பரிவாரங்களுடன் நீலகிரிப் பாடியினின்றும் நீங்கி வடநாடு நோக்கிப் பிரயாணிப்பானாயினான்.

இங்ஙனம், தன் பெருஞ்சேனைகளுடன் சென்ற செங்குட்டுவன் முடிவில் கங்கைப் பேரியாற்றை நெருங்கினன். ஆங்கு, முன்னரே சென்றிருந்த சஞ்சயனால் நூற்றுவர்கன்னர்


  1. கண்ணெழுத்தாளர் - திருமுகமெழுதுவார்.