பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

63

உதவிகொண்டு கங்கையைச் சேனைகள் கடத்தற்கு வேண்டிய மரக்கலங்கள் சித்தஞ்செய்யப்பட்டிருந்தன. அப்பெரிய நதியை அடைந்த சேரர் பெருந்தகை தன் சகல சைந்யங்களுடனும் அதனைக் கடந்து அவ்வாற்றின் வடகரையை அடைந்தான். அப்போது தம் நட்பாளனாகிய செங்குட்டுவனை அந்நாடாளும் நூற்றுவர்கன்னர் எதிர்கொண்டு உபசரித்தனர். அவருபசாரத்தைப் பெற்றுச் செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டுத் தன் பகைவரது நாடாகிய உத் தரகோசலத்தை நெருங்கினான். இங்ஙனம் சேரவாசன் பெரும்படையுடன் தம் தேசத்தை நெருங்குகின்றான் என்ற செய்தி தெரிந்ததும், அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்பவருதவியுடன் கனக விசயரென்ற வேந்தர், தமிழராற்றலைக் காண்போமென்று செருக்கிப் பெருத்த சேனையுடன் போர்க்கோலங்கொண்டு எதிர்ந்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலும், இரையைத்தேடி வேட்டைக்குச்சென்ற சிங்கமொன்று யானையின் பெருங்கூட்டத்தைக் கண்டு உள்ளம் பூரித்துப் பாய்ந்தவாறுபோல, தன்னை எதிர்த்து வந்த வடவேந்தரது சேனைகண்டு களித்து, அவற்றின் மேல் விழுந்து செங்குட்டுவன் பொருவானாயினன். வடவரும் தமிழரும் பொருது நின்ற அப்பெரும்போரில், துகிற்கொடிகளின் பந்தர்களாற் சூரிய கிரணங்கள் மறைப்புண்டன. கொடும்பறைகளும் சங்கங்களும் நீண்ட கொம்புகளும் பேரிகைகளும் மயிர்க்கண் முரசங்களும் திக்குகளினின்று எதிரொலியுண்டாகும்படி ஒலித்தன. வில், வேல், கேடயமிவற்றைக் கொண்ட மறவர்களும், தேர்வீரர் யானைவிரர் குதிரைவீரர்