பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. நீர்ப்படைக்காதை.
செங்குட்டுவன் பத்தினிப்படிவத்தைக் கங்கைநீராட்டியதும்,
தன்னாடு திரும்பியதும்.


மேற்கூறியவாறு, தமிழாது ஆற்றலையறியாது தன்னுடன் மலைந்த ஆரியச்சேனைகளைக் கூற்றுவனுக்குத் தொழில் பெருகும்படி கொன்று, தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராமராவணயுத்தம் பதினெட்டு மாதத்தும், பாரத யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனக விசயரும் புரிந்த போர் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென்று, உலகோர் இப்போரையும் கூட்டியெண்ணிக்கொள்ளும் படி ஒருபகற்குள்ளே பகைவரை வென்று விளங்கிய சேரன்-செங்குட்டுவன், சினமிக்க தன் சேனைகளால் பத்தினிக் கடவுட்குரிய சிலையை இமயத்தினின்று மெடுப்பித்த பின்னர், தன்னுடன் போர்க்கோலங்கொண்டெழுந்த கனகவிசயரது கதிர்முடிமேல் அச்சிலையையேற்றிக்கொண்டு அதனை நீராட்டித் தூய்மை செய்தற்பொருட்டுக் கங்கைப்பேரியாற்றின் வட கரைவந்து சேர்ந்தான். அவன் அங்குவந்ததும், பத்தினியின் சிலை ஆகமம் வல்லோரால் கங்காநதியில் முறைப்படி நீராட்டப்பட்டது. இது முடிந்தபின்னர்ச் சேனையுடனும் பரிவாரங்களுடனும் சேரர்பெருமான் நாவாய்கள் மூலம் அப்பேரியாற்றைக் கடந்து அதன் தென்கரையிற் பிரவேசித்தனன். அம்மாநதியின் தென்கரைவெளிப்பரப்பிலே, ஆரியமன்னரும் நட்பாளருமாகிய கன்னரால் ஜயசீலனாகவருஞ் சேரர் பெருந்தகை படைகளுடன் வந்து தங்குதற்கென்று, அரசர்க்குரியகோயிலும் அழகியமண்டபங்களும் இராசசபைகளும்