வடநாட்டியாத்திரை.
67
பூம்பந்தரும் உரிமைப்பள்ளியும் தாமரைப் பொய்கையும் ஆடரங்குகளும் மற்றும் பெருவேந்தர்க்கு வேண்டியனவெல்லாம் மிகவும் அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. செங்குட்டுவன் தென்கரை புக்கதும் அவ்வழகியபாடியில் தன் பரிவாரங்களோடுஞ்சென்று தங்கினான்.
இங்ஙனம் பாடியிற்றங்கியபின், சேரர்பெருமான், எதிர்த்த மாற்றரசரது மனவூக்கங் கெடும்படி போரில் தம் வீரச் செயல்களைக் காட்டி வீரசுவர்க்கமடைந்த தானைத்தலைவர்களும், அப்போரிலே அடர்ந்துழக்கித் தலையுந்தோளும் விலைபெற அறுபட்டுக்கிடந்தவர்களும், வாளாற் செய்யும் வினைகளெல்லாஞ்செய்து பகைவரை அழித்து முடிந்தவர்களும், உறவினரோடு தம்மகளிரும் உடன் மடியும்படி வீழ்ந்தவர்களுமாகிய இறந்துபட்ட வீரர்களுடைய மைந்தரையும்; தூசிப் படையில் நின்று மாற்றாரை வென்று வாகைமாலை சூடியவர்களும், பகைவரது தேர்வீரரைக்கொன்று அவர்களுடைய குருதியோடு பொலிந்து நின்றவர்களும், பகைவரது கருந் தலைகளைக் கூற்றுவனுங் கண்டிரங்கும்படி ஒரு சேர அறுத்து வெற்றிபெற்றவர்களும், கவசஞ்சிதைய மார்பில் விழுப்புண்பட்டு மாற்றாரைப் புறங்கண்டு மீண்டவர்களும் ஆகிய (இறவாத) எல்லாவீரர்களையும் தன்னிடத்து வரும்படியழைத்து, அவரடைந்த வெற்றிக்கு அறிகுறியாக அவர்கட்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களை, தான் பிறந்தநாளிற் செய்யும் பெருங்கொடையினும் மிகுதியாக நெடும்போதிருந்து கொடுத்து வெகுமானித்தான். இங்ஙனம் பனம்பூவைத் தும்பைமாலையுடன் சூடிப் புலவர்பாடுதற்குரிய புறத்துறைகளெல்லாம் முடித்து ஜயசீலனாகச் சோன்-செங்குட்டுவன் தன்னரசிருக்கையில்