பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

79


நின்றேம். அஃதறிந்த அவ்வரசன் 'போர்க்களத்தே பேராண்மை காட்டிப்பொருது தங்கள் வாளையும் குடையையும் அக் களத்திட்டு உயிர் தப்பியோடிய வேந்தரைப் போரிற்பிடித்துக் கொண்டுவருதல் ஒரு வெற்றியாகாது' என்று தன் சேனாபதியை நோக்கிக் கூறினான். பின்னர் அரசே! அவன் தலைநகரைவிட்டு நீங்கி மதுரை சென்று பாண்டியனைக் கண்டேம். 'அமர்க்களத்தே தங்கள் குடைக்காம்பை நட்டுவத்தலைவர் போலக் கையிலே பிடித்துக்கொண்டு, இமயப்பக்கத்துள்ள குயிலாலுவம் என்னும் போர்க்களத்தைத் துறந்து புறங்கொடுத்து, ஆங்குள்ள சிவபிரானை வணங்கியவராய்த் தவக்கோலங் கொண்டோடின ஆரியமன்னர்கள்மேல் இவ்வாறு மிகுந்த சீற்றங்கொண்ட அரசனது வெற்றி, இதுவரையில்லாத புதுமையாகும்' என்றான் அப்பாண்டியன்" எனச் சேரர்பிரானுக்குத் தூதர் தலைவனான நீலன் அவ்வேந்தர் கூறிய வார்த்தைகளைச் செப்பி நின்றனன. இவற்றைச் செவியுற்றுக்கேட்ட செங்குட்டுவன், தன் வெற்றியை அவ் வரசர்கள் இகழ்ந்ததனாற் கோபம் பெருகித் தாமரை போன்ற கண்கள் தழனிறங் கொள்ள நகைசெய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சோழ பாண்டியர்மேற் சீற்றம்பெருகுதலை மறையவனாகிய மாடலன் கண்டு அச்சபையிலெழுந்து நின்று 'வேந்தர்வேந்தே! நின் வெற்றி விளங்குவதாக' என்றேத்திப் பின்வருமாறு கூறுகின்றான். "மிளகுக்கொடிமிக்க மலைப்பக்கத்துறங்கும் யானைக் கூட்டங்களையுடைய பகைவரது வியலூரையழித்தும், ஆத்தி மாலையுடையவரும் சோழர்குடியினருமாகிய ஒன்பதின்மருங் கூடி விளைத்த பெரும்போரை நேரிவாயில் என்ற ஊரில் வென்றும், பெரிய தேர்ச்சேனைகளுடன் இடும்பாதவனத்துத் தங்கி ஆங்கு விளைந்த போரைக்கடந்தும், நெடுங்கடலில் மாக்கலங்-