பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சேரன்-செங்குட்டுவன்

களைச் செலுத்தியும், முன்னொரு காலத்தில் எதிர்த்து வந்த ஆரிய மன்னரைக் கங்கைக்கரையிற் செயித்தும் இங்ஙனம் வெற்றிமாலை சூடி, உயர்ந்தோர் பலருடன் அறியவேண்டுவனவற்றை அறிந்த அரசரேறே ! நீ வாழ்க; நின் கோபம் அடங்குவதாக; நின் வாழ்நாட்கள் ஆன்பொருநையாற்று மணலினும் அதிகமாக விளங்குக; யான் கூறுஞ் சொற்களை இகழாது கேட்டருள்வாய்; உலகங்காத்தலை மேற்கொண்டு விளங்கும் உனது சிறந்த ஆயுட்காலத்தே ஐம்பதியாண்டுகள் வரை கழிந்தும் நீ அறக்கள வேள்வியைச் செய்யாது எப்போதும் மறக்கள வேள்வியே செய்து வருகின்றாய் ; இராசகாரியங்களை யெல்லாம் முற்றச்செய்து கொற்றவாளை வலத்தேந்தி நிற்கும் உன்னுடைய தலைநகரத்தில், முன்னிருந்த புகழ்மிக்க உன் முன்னோரிலே,

[1]“கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 1
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும் 2
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் 3
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 4
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் 5
இகற்பெருந் தானையொ டிருஞ்செரு வோட்டி

அகப்பா வெறிந்த அருந்திற லாயினும் 6

  1. இவ் வடிகளிற் கூறப்பட்ட செங்குட்டுவன் முன்னோர் செயல்களைப் பதிற்றுப்பத்துப்பாடல்களிலும் பதிகங்களிலும் கண்ட சேரர் செய்திகளோடு ஒப்பிடும்போது, பல (8,6.7) ஒருவர் செய்கைகளாக வும், சில (8)செங்குட்டுவனுக்குப்பிற்பட்ட சேரர்செயலாகவும், முறை பிறழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால், செங்குட்டுவனுக்கு முன்னோர்களை , இவ் வடிகளைக் கொண்டு முறைப்படுத்தல் அருமையாகும்.