பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 சேர மன்னர் வரலாறு



நெடுஞ்சேரலாதன் முடிசூடிக்கொண்ட போது வேந்தர் எழுவர் முடிப்பொன்னாற்செய்த பொன்னாரம் ஒன்று வழிவழியாக வரும் முறைப்படி அவன் மார்பிலும் அணியப் பெற்றது. அதன் கருத்தை உணர்த்த வந்த சான்றோர், ‘தம்மவர் அல்லாத பிற வேந்தரை வென்றால், அவர் முடிப்பொன் கொண்டு கழல் செய்து கொள்வது தமிழரசர் மரபு[1]; ஒரு காலத்தே சேர நாடு எட்டுச் சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது; மன்னர் எண்மரும் தனித்து நிற்பின் பகைவர் தம்மை வெல்லற்கு எளிதாம் என எண்ணித் தம்மில் ஒன்றுபட்டு ஒருவர் முடிவேந்தராக ஏனையோர் அவர்க்குத் துணைவராய்ப் பிரிவின்றி ஒழுகுதல் வேண்டும் என்று உறுதிசெய்து கொண்டனர் என்றும் ‘அவ் வொற்றுமைக் குறிப்புத் தோன்ற ஏனை எழுவர் முடிப்பொன்னால் ஆரம் செய்து மார்பில் அணியாகப் பூண்டனர்’ என்றும் எடுத்துரைத்தனர். இதைக் கருத்துட்கொண்டே எண்மரும் கூடியிருந்து ஆராயும் அரசியற்குழு எண்பேராயம் எனப்பட்டது; பின்பு நாளடைவில் எண்பேராயம் வேறு வகையில் இயலுவதாயிற்று. இவ்வாறே பாண்டிநாடு ஐம் பெரும் நாடுகளாகப் பிரிந்திருந்தது, பின்பு ஐம் பெருந்தலைவரும் தம்மில் ஒருவராய் இயைந்ததனால் பாண்டியர் பஞ்சவர்[2]


  1. சோழன்குள் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடலுற்ற ஆவூர் மூலங்கிழார், “நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டு அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல்லாளனை” (புறம் 40) என்பது காண்க.
  2. “செருமாண் பஞ்சவர்” - புறம். 58.