பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 113



அவரது குறும்பைப் பொறாத நாட்டு மக்கள் இமயவரம்பன் பால் முறையிட்டனர். இவன் தக்கதொரு கடற்படை கொண்டு கடம்பர் வாழ்ந்த தீவுக்குட் சென்று அவர்களைக் கடுமையாகத் தாக்கி வென்றான். அவர்களது காவல் மரமான கடம்பையும் வெட்டி வீழ்த்தித் தங்கள் தமிழ் முறைப்படியே முரசு செய்து கொண்டு வந்தான். பணிந்தொடுங்கிய கடம்பர்கள் சேர நாட்டு எல்லையில் இருந்த தீவுகளின் நீங்கி வட பகுதியிலுள்ள தீவுகட்குச் சென்று ஒடுங்கினர். மேனாட்டு யவனர்கள் குறிக்கும் கடற் குறும்பர்கள் இக் கடம்பர்களே யாவர்.

கடற்குறும்பு செய்த கடம்பரை வென்ற வெற்றி யினை இமயவரம்பன் தன் மாந்தை நகர்க்கண் சிறப்புடன் விழாக் கொண்டாடினான். சேரநாட்டிற் பல பகுதிகளினின்றும் வேந்தர்களும் தலைவர்களும் சான்றோர்களும் வந்து கூடியிருந்தனர். விழாவிறுதியில் இமயவரம்பன் எழில்மிக்க யானையொன்றின் மேல் திருவுலாச் செய்தான். அக் காட்சியினை அங்கு வந்திருந்த சான்றோரும் கண்ணனார் கண் குளிரக் கண்டார்; அவர் கருத்தில் முருகவேள் கடலகத்தே மா மரத்தைக் காவன் மரமாகக் கொண்டிருந்த சூரன் முதலியோரை வென்று விழாச் செய்த நிகழ்ச்சி தோன்றிற்று. அதன் பயனாக அவர் இமயவரம்பனை அழகிய பாட்டொன்றால் சிறப்பித்தார்.

“மாக் கடல் நடுவில் இருக்கை அமைத்துக் கொண்டு அதன்கண் மாமரம் ஒன்றைக் காவன் மரமாகப் போற்றி வந்த அவுணர்கள், தீமை செய்தது