பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 155



வேண்டிய செல்வத்தை உதவுதல் வேண்டும்″ என்று தெரிவித்தார். அவருடைய உள்ளத்தின் உயர்வு கண்டு உவகை மிகுந்து, அவர் வேண்டியவாறே குட்டுவன், வேள்விகட்கு வேண்டும் பலவும் உவந்து அளித்தான். கோதமனாரும் இடையீடின்றி ஒன்பது வேள்விகளை முடித்துப் பத்தாம் வேள்வி நடைபெறுகையில் தன் பார்ப்பனியுடன் மறைந்து விட்டார்.

தன்னோடு துணைவராய் இருந்த நெடும் பாரதாயனார் துறவு பூண்டதும், கோதமனார் வேள்விக் காலத்தில் மறைந்ததும், குட்டுவன் உள்ளத்தில் நன்கு பதிந்து துறக்க வாழ்வில் அவனுக்குப் பெருவேட்கையை உண்டு பண்ணிவிட்டன. அரசியற் செல்வத்திலும், மறம் வீங்கு புகழிலும் அவனுக்கு உவர்ப்புப் பிறந்தன. அதன் மேல் அவனுக்கு மகப்பேறும் இல்லாதிருந்தது. அஃது, அவன் கருத்தை மேன்மேலும் ஊக்கவே, அவன் தானும் துறவு மேற்கொள்ளத் துணிந்து சான்றோர் சிலர் துணை செய்யத் தன் மனைவியுடன் துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தான்.


7. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குப் பதுமன் தேவி, சோழன் மணக்கிள்ளி என இரு மனைவியர் இருந்தனர். அவருள் பதுமன் தேவியென்பவள், வேணாட்டு வேளிர் குடியில் தோன்றியவள். அவள் தந்தை வேளாவிக்கோமான் எனப்படுவன். மணக்கிள்ளி