பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 சேர மன்னர் வரலாறு



விரதியரும் ஊரவரும் ஒருங்கு கூடி நீர்த்துறைக்குச் சென்று நீராடி, மனம் தூயராய்த் திருத்துழாய் மாலையும் ஆழிப்புடையு முடைய திருமாலை வழிபட்டுச் செல்கின்றனர். அக் காலையில், வேந்தனும் ஆற்றில் நீராடித் திருமாலை வழிபட்டுத் திருவோலக்கம் இருக்கின்றனன். அரசியற் சுற்றத்தார் உடனிருப்ப, பாணர் கூத்தர் முதலிய பரிசிலர் பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்த, சான்றோர் வேந்தனை வாழ்த்தி மகிழ்விக்கின்றனர்.

இந்நிலையில், காப்பியாற்றுக் காப்பியனார், வேந்தனை வாழ்த்தலுற்று, உண்ணா விரதியரும் மக்களும் ஆறாடித் திருமாலை வழிபட்டுச் செல்லாநிற்க, உலகிருள் நீங்க ஒளி செய்யும் திங்கள், கலைமுழுதும் நிரம்பித் தாரகை சூழ விளங்குவது போல, நீ பகையிருள் அறக்கடிந்து அவரது முரசு கொண்டு துளங்குடி திருத்தி வளம் பெருவிக்குமாற்றால், ஆண்கடன் இறுத்து விளங்குகின்றாய்; நின் மார்பு மலைபோல் விளங்குகிறது; வானத்திற் கடவுளர் இழைத்த தூங்கெயிற் கதவுக்கு இட்ட எழுமரம் போல நின்தோள் நிமிர்ந்து நிற்கிறது; வண்புகழ்க்குரிய வண்டன் போல நீ சிறக்கின்றாய். வண்டு மொய்க்கும் கூந்தலும், அறம் சான்ற கற்பும், ஒள்ளிய நுதலும், மாமை மேனியும் உடைய நின் தேவி, விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்தாளான அருந்ததி போன்ற அமைதியுண்டயள். நின் முரசும், வெற்றி குறித்து முழங்குமே யன்றி, மக்களை வெறிதே அச்சுறுத்தற்கு என முழங்குவதில்லை. நின் மறவர் ஒடுங்காத் தெவ்வர் ஊக்கம் கெடுத்தற்கு எறிவதல்லது, தோற்றோடுவார்