பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக் கடுங்கோ வாழியாதன் 235


நாடகமாடிக் காட்டக் கண்டு இன்புறுவதும் வழக்கம். அதனைச் செய்தால் துறக்கத்தில் வாழும் அச் சான்றோர் மகிழ்வர் என்பது கருத்து. இக் கருத்தே பற்றிச் செல்வக்கடுங்கோ இவற்றை மிகுதியாகச் செய்து சிறந்தான். போர்களில் வெற்றி பெறும்போதெல்லாம் களவேள்விகள் செய்து போர்க் கடவுளாகிய கொற்ற வையை மகிழ்வித்தான்.

முதியவர்களாகிய தாய் தந்தையர்க்கும் சான் றோர்க்கும் தம் மக்களைத் தொண்டுசெய்ய விடுவது பண்டையோர் நெறிகளுள் ஒன்றன்றோ! அவர்கள் மெய்வன்மையொடு வாழ்ந்த காலத்தில் செய்த நன்றியை நினைந்து இவ்வாறு செய்வது கடன் என்றும், இஃது உலகிற் பிறந்தவுடனே அமையும் கடனாதல் பற்றித் தொல்சுடன் என்றும் தமிழ்ச் சான்றோர் கருதினர். முனிவர்களாகிய முது சான்றோர்க்கு அரசிளஞ் சிறுவர்களைத் தொண்டு செய்ய விடுத்த செய்திகள் பலவற்றைப் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. இம் முறையை மேற்கொண்டு நம் செல்வக் கடுங்கோ தன்னுடைய சிறுவர்களை முதியோர்களுக்குத் தொண்டு செய்ய விடுத்துத் தன் தொல்கடனை இறுத்தான். சான்றோரும், “இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்[1]” என்று இச் செல்வக் கடுங்கோவைப் பாராட்டியுள்ளனர். இவனுக்கு, முன்னோனாகிய செங்குட்டுவன் தன் மகன் குட்டுவன் சேரலைப்


  1. பதிற். 70.