பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 சேர மன்னர் வரலாறு



குன்றூர் கிழார் அறிந்தார். அவர், வேந்தனை நோக்கி, “பொறை வேந்தே, வேள்விச் சடங்குகட்குரிய விதிவிலக்குரைகளின் பொருள் காண்பதில் பண்டை ஆசிரியர்களின் வகுத்தறிவது நம்மனோர்க்கு அரிது; உண்மை காணவேண்டின் சதுக்கத் தேவரைக் கேட்பது தக்கது;

‘தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அல்லவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க் கரியாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்
காத நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூதசதுக்கத்தின்[1]

இயல்பு இது; இத் தெய்வம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பது; பார்ப்பனி மருதியென்பாள் தன் குற்றத்தைத் தானே யறியாது யான் செய்த குற்றத்தை அறிகில்லேன்[2]’ என்று சதுக்கப் பூதரைக் கேட்டு உண்மை தெரிந்த வரலாறு நாடறிந்த தொன்று” என எடுத்துரைத்தார்.

அங்கிருந்த சான்றோரும் வேந்தரும் வஞ்சிநகர்க் கண் பூத சதுக்கம் அமைக்க வேண்டுமென வேந்தனை வேண்டிக் கொண்டனர். சின்னாட்களில் பூத சதுக்கம் அமைத்துச் சாந்தி விழாவும் செய்யப்பட்டது. விழாவின் இறுதியில் வந்திருந்த சான்றோர் பலரும் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை வாழ்த்தினர். பெருங்குன்றூர் கிழார், “மழை தப்பாது பொழிக, கானம்


  1. சிலப். v. 128-34.
  2. மணி. 22:54.