பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 31



கூறுகின்றனர். திருவிதாங்கூர் உள்ள பகுதியை மேனாட்டு யவனர் ஆய் (Ave) நாடென்றதும், ஆய் என்பான் தமிழில் வேளிருளொருவன் என்பதும், எனவே, அப் பகுதி வேணாடமென்பதும் அறியாமை யால், கேரள வரலாறுடையார் இவ்வாறு கூறலாயினர் எனக் கொள்ளல் வேண்டும்.

மேலைக் கடற்கரைப் பகுதியான சேர நாட்டின் வடக்கிற் பகுதி கொண்கான நாடு. அதன் தெற்கில் உள்ளது குடநாடு; அதனையடுத்து நிற்கும் தென்பகுதி குட்டநாடு; அதன் தெற்கு வேணாடு என்பது முன்னர்க் காணப்பட்டது, சேர நாட்டு வடகரைக்கும் கோகரணத் துக்கும் இடை நின்ற நாடு, கொண்கான நாடு; இது துளுநாடென்றும் வழங்கியதுண்டு. பொன்வானி யாற்றுக்கும் வடகரைச் சேரவாற்றுக்கும் இடையில் லுள்ளது குட நாடு; பொன்வானி இந் நாளில் பொன்னானியென வழங்குகிறது. கொல்லத்துக்கும் பொன்வானிக்கும் இடையில் உள்ளதாகிய நாடு குட்ட நாடாகும். இதனையே சுருங்க நோக்குங்கால் திருவாங்கூர் நாட்டுக் கோட்டையம் பகுதிக்கும் வடக்கில் மலையாளம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையம் பகுதிக்கும் இடையே இரண்டையும் தன்னுள் அகப்படுத்தி நிற்கும் நிலப்பகுதி குட்ட நாடென்பது இனிது விளங்கும். திருவிதாங்கூர் நாட்டுக் கோட்டயம். பகுதியலுள்ள அம்பலப்புழை, கருநாகப் பள்ளி, செங்குணான்சேரி, மூவாத்துப்புழை என்ற தாலூகாக்கள் அடங்கிய பகுதி அந் நாட்டவரால் குட்ட நாடென்று வழங்குகிறது; மலையாள மாவட்டத்தி