பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 சேர மன்னர் வரலாறு



இப் பிரிவின் வடமலைத் தொடர்களிற் காணப்படும் ஏழிழ்மலையும், குதிரை மலையும், தென்மலைப் பகுதியில் பொதியமும் நாஞ்சில் மலையும், அயிரை மலையும், நேரி மலையும் பிறவும் புலவர் பாடும் புகழ்பெற்றன.

சேர நாட்டின் வட பகுதியான குடநாட்டு மலைகளுள் ஏழில்மலை 855 அடி உயரமுள்ளது. இது நிற்கும் பகுதி கொண்கான மென்று முன்பே கூறப் பட்டது. இதுவே கொங்கண மென்றும் இங்கே வாழும் கொண்கர்கள் கொண்கானிகள் என்றும் வழங்கப் படுவது நாளடைவில் உண்டான சிதைவு. பண்டை நாளைத் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்த இசைக் கருவிகளுள் ஏழில் என்பது ஒன்று; அது போலும் தோற்றத்தை இம் மலையும் கொண்டிருந்தமையின் பண்டையோர் இதனை ஏழில்மலை யென்றனர். இவ்வாறே குதிரைமுகம் போலக் காட்சியளிக்கும் மலைமுடியைக் குதிரைமலை யென்றும் வழங்கினர்[1]. இவ் வெழில் மலைக்குக் கிழக்கில் தோன்றும் குன்றுகளில் ஒன்று நீலகிரி எனப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்றபோது தங்கினதும் இவ்விடத்தேயாம்; இதற்கு இங்குள்ள செங்கோட்டூர் இனிய சான்று பகருகிறது. அக்காலை, அவன்பால் கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் வந்து தமது கூத்தால் அவனை மகிழ்வித்துப் பரிசில் பெற்று இன்புற்றனரென்று இளங்கோவடிகள்[2] இயம்புகின்றார். மேலை


  1. Imp. Gezet of Madras. Vol ii p. 395-6.
  2. சிலப் xxvI-106