பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 385



என்று உடல் வியர்த்து வருந்துகிறாள். “தெறுக திர் உலைஇய வேனில்” என்றதனால், வெயில் வெம்மையும், ‘'உறுவளி ஒலிகழைக் கண் உறுப்பு தீண்டலின் பொறி பிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரி'’ என்றதனால், மூங்கில்கள் காற்றால் ஒன்றோடொன்று உராய்வதால் எழுகின்ற தீயின் தீமையும், “பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை'’ என்றதனால், வழியின் செல்வருமையும் கூறுகின்றாள்.

இந் நினைவுகளால் அவள் உள்ளத்தில் தன் மகள் சென்ற வழியின் வெம்மையும் அருமையும் தோன்றவே அவற்றைப் பொறுக்கலாகாத மகளது மென்மையும் உடன் தோன்றுவதாயிற்று. அதனால், உளம் புழுங்கி, இவ் வழிகள் அவளுடைய “நல்லடிக்கு அமைந்தன் வல்ல; மெல்லியல்; வல்லுநள் கொல்லோ ?'’ என்று சொல்லிக் கதறிக் கண்ணீர் சொரிகின்றாள். அதனை, தன் நெஞ்சில் தோன்றிய முறையிலேயே, அவள்,

“ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனோடு பொலிந்த வானின் தோன்றித்
தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே”

என்று சொல்லுகிறாள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த செவிலியோ மகளது காதலொழுக்கத்தை அறிந்தவள். “தெரியிணர்க் கோங்கின், காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர், கைவிடு சுடரின் தோன்றும்’ என்று அவன் கூறியதையே எடுத்துச் சொல்லி, காற்று வீச