பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 51



வேந்தனானான். அவன் கேரள நாட்டை ஐந்து ஆண்டுகளே ஆட்சி செய்தான். அவன் தான் கேரள நாட்டை “துளுராஜ்யம், கூபக ராஜ்யம், கேரள ராஜ்யம், மூஷிக ராஜ்யம்” என நான்காக வகுத்த முதலரசன். அவனுக்குப் பின் கந்தன் பெருமாள் என்பவன் “பூருவ தேசத்திலிருந்து வந்து நான்காண்டுகள் ஆட்சி செய்தான். கைநெற்றி யென்னுமிடத்தே அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். கோட்டிப் பெருமாள் ஓராண்டும், மாடப் பெருமாள் பதினோராண்டும், அவன் தம்பி ஏழிப் பெருமாள் பன்னீராண்டும் ஆட்சி செய்தனர். பின்பு கொம்பன் பெருமாள் தோன்றித் தான் இருந்த மூன்றரை யாண்டு நெய்த்தரா ஆற்றங்கரையில் ஒரு குடிலில் இருந்தொழிந்தான். விசயன் பெருமாள் விசயன் கொல்லம் என்ற கோட்டையையமைத்துப் பன்னீராண்டு ஆட்சி செய்தான். அரனுக்குப் பின் வந்த வல்லப் பெருமாள் சிவலிங்கமொன்று கண்டு நெய்த்தர ஆற்றங்கரையில் அதற்கொரு கோயிலும் கோட்டையும் கட்டிப் பதினோராண்டிருந்தான். அரிச்சந்திர பெருமாள் பரளி மலையில் ஒரு கோட்டையை யமைத்து, அங்கே, தான் தனித்திருந்து ஒருவரும் அறியா வகையில் மறைந்து போனான். அவனையடுத்து வந்த மல்லன் பெருமாள் பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்.

இப் பெருமாட்குப் பின் வந்த வேந்தன், பாண்டிப் பெருமாளான குலசேகரப் பெருமாள் எனப்படுவன். இவன் வெளிநாட்டிலிருந்து வேத ஆசிரியர் இருவரைக் கொணர்ந்து திருக்கண்ணபுரம் என்னுமிடத்தே கல்லூரி