பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரநாட்டின் தொன்மை 55



பொருளீட்டுவதிலே கழிந்தமையின் அவர்களது குறிப்புகள் கிடைப்பது அரிதாய் விட்டது. கி.மு. ஐந்து ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் முற்போந்து கடலகலம் காண முயன்றனர். அவர்கள் தொடக்கத்தில் மத்தியதரைக் கலையும் கருங்கடலையும் அகலங் கண்டனர். அந் நாளில் அலச்சாந்தர் விடுத்த கிரேக் கர்கள் வட இந்தியாவின் மேலைப் பகுதியான சிந்து நதி பாயும் நாட்டைக் கண்டு கொண்டு திரும்பினர். அவர்கட்குத் தலைவரான நியார்க்கஸ் (Nearchus) தரை வழியாகச் சிந்து நதிக்கும் யூபரடீசு டைகரீசு ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியில் வழி கண்டான்; அது முதல் நமது இந்திய நாட்டின் செல்வநிலை கிரேக்கர் உள்ளத்தில் மதிப்புண்டுபண்ணிற்று. அலச்சாந்தர் உள்ளத்தில் மதிப்புண்டுபண்ணிற்று. அலச்சாந்தருக்குப் பின் செல்யூக்சு நிகேட்டர் விடுத்த மெக்சு தனிசு என்பார், கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில் (Palibothra) சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார். அக் குறிப்பினுள் தென் தமிழ் நாட்டு வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் சேர்மா (Chermae) என்பது சேரமான்களையும், நறா (Narae) என்பது சேர நாட்டு வட பகுதியான குடநாட்டு நறவூரையும் குறிப்பனவாம்.[1]

பின்னர் எகிப்து நாட்டை யாண்ட தாலமிகள் செங்கடல் வழியாக இந்திய நாட்டுக்கு வழி கண்டனர்.


  1. W. Woodburn Hyde’s Ancient Greek Mariners. P. 206