பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 சேர மன்னர் வரலாறு



ஆனால், மேனாட்டுக் கிரேக்க யவனர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சேரர்களைச் சேர ரென்றும் சேரமான்களென்றும் வழங்கி வந்திருக்கின்றனர்.

வேத காலத்துக்குப் பின் வந்த வடமொழியாளர் தாங்கள் புதியவாகக் காணும் நாடு நகரங்களின் பெயரையும் ஆறுகள் ஊர்கள் முதலியவற்றின் பெயரையும் மக்களினத்தின் பெயரையும் தாங்கள் கலந்து வழங்கும் வகையில் மூன்று நெறிகளை மேற் கொண்டனர். முதலாவது, தாம் எதிர்ப்படும் பெயர் களைத் தம்முடைய மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வது. பாண்டி நாட்டுக் கூடல் வாயிலைக் கடாபுரமென வான்மீகியார் மொழிபெயர்த்துரைப் பதையும், பின் வந்தோர் அந் நெறியே பின்பற்றி நாடு நகரங்களின் பெயர்களையும் ஆறு குளங்களின் பெயர்களையும் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதையும் தமிழுலகம் நன்கறிந்திருக்கிறது. தமிழகத்து மேலைமலைத் தொடரைச் சஃயாத்திரி யென்பதும், தொண்டை நாட்டுப் பாலியாற்றை க்ஷிர நதியென்பதும், நடு நாட்டு முதுகுன்றத்தை விருத்தாசல் மென்பதும் மதுரைத் திருவாலயாய் அங்கயற் கண்ணியை மீனாக்ஷி யென்பதும் போதிய சான்றுகளாகும். மற்றொன்று எதிர்ப்படும் பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்துக்கொள்வது. இதற்குத் தென்றமிழ் நாட்டு முத்துகளை முத்தம் என்பதும், பவளத்தைப் பிரவாள மென்பதும், சோழனைச் சோடனென்பதும் ஏற்ற சான்றுகளாம். வேறொன்று, தம் மொழிநடைக்கு