பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 சேர மன்னர் வரலாறு



திருவையாறு திருவாடி யென்றாகித் திருவாதியானது. காண்போர் சேரவாறு சாராவதியானது கண்டு வியப்பெய்தார்.

தெற்கே பொன்வானிபோல வடக்கில் இந்த வானியாறு இருப்பதை நோக்கின் பண்டை நாளில் சேரநாட்டுக்கு வடவெல்லையாக இந்த வானியாறு விளங்கிற்றென்பது இனிது விளங்கும். இதற்கு வடக்கில் வேளகமும் வடகிழக்கில் வானவாசி நாடும் இருந்தன. இதனை ஆண்ட கடம்பர்கள் சேர நாட்டிற்கு குறும்பு செய்து ஒழுகினமை சங்க இலக்கியங்களால் தெரிகிறது ஒருகால் அவர்கள் சேரர்க்குரிய கொண்கான நாட்டுட் புகுந்து குறும்பு செய்து அப் பகுதியைத் தமது வானவாசி நாட்டோடு சேர்த்துக்கொள்ள முயன்றார்கள். நாடோறும் அவர்களது குறும்பு பெருகக்கண்ட சேர வேந்தர் பெரும் படையுடன் சென்று கடம்பர்களைத் தாக்கி வென்று வானியாற்றின் வடக்கிற் சென்று ஒடுங்குமாறு செய்தநர். இவ் வகையால் கடம்பர்கள் மீள மீளப் போர் தொடுக்கா வண்ணம், சேரர் கடம்பரோடு ஒன்றுகூடி வானவாற்றை வரம்பு செய்து கொண்டனர். வானியாறு சேரருக்கு உரியதானமையின், அதுவே பின்பு சேரவாறாயிற்று; அச் சேரவாறே சாராவதியென் முன்பே கூறினோம். மேலை வானமா மலைத் தொடருக்கு உரிமையும், அதனைத் தன் நாட்டுக்கு எல்லையுமாகக் கொண்டமையின், சேர மன்னன் வானவரம்பனானான் என்பது உண்டு. சங்கத் தொகைநூல் பாடிய ஆசிரியர்கள் காலத்துக்குப் பல்லாண்டுகட்கு முன்னர் இது நிகழ்ந்து மருவின்மை