பக்கம்:சேரர் தாயமுறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. எனும் அடிகளிற் சாத்தனார் மணிமேகலையும் உதய குமா னும் பலமுற் பிறப்புக்களிற் சதிபதிகளாகவாழ்த்த விவரத்தைவிளக்குகின்ஞார். இவ் வடிகளில் மகள்' என்பது மனை சியையேசுட்டிநிற்பது வெளிப்படை, மஹாமஹோபாத்தியாய சாமிநாதையரவர்களும் இவ்வடிகளுக்குத் காமெழுதிய குறிப்புரையில் மகள் என்பதற்கு 'மனைவி' யென்றே பொருள் வரைந்துள்ளார்கள். இதனால் மகட்சொல்லுக்கு மனைவிப் பொருள் வழக்குண்டென்பது தெளியப்படுகிறது. இன்னும் "தண வன்”-மனைவி” யெனும் பொருளில் "மகன்" "மகள்" என்ற சொற் கள் வருயென்பதை, கோதக பண்டோ தும்மக னார்க்கினி* என இளங்கோவும் கூறுதலாலும், செய்யுளிலும் வழக்கிலும் பணமகன்'மணமகள்' என்ற பிரயோகங்கள் அடிப்பட்ட ஆட்சிபெறுதலாலும், என்கறியலாம். ஆகவே, 'மகள்' எனுஞ் சொல் 'மனைவி' யெனும் பொருளில் வருவது அருமையில்லை, ஆன்றசான்றோசாட்சியும் தமிழ் நன்மக்களிடை நெடுவழக்கு முடையதென்றே தெரிகின்றது. (d) இப்பொருளில் அடிகள்வாக்கும் அடியார்க்குசல்லார் உரைத் தொடரும் பதிற்றுப்பத்துப்பாக்களோடு எவ்விதப் பிணக்குமின்றிப் பொருத்தியமைகின்றன. சோழன் மகள்” என்பதற்குச் சோழன் மனைவி" யென்று பொருள் கொண்டால், சோழனுக்கு அவன் தேவி பீன்றமக்கள் சேரனுக்குத் தயராசார், மருகரேயாவரென்பது விசத மாகும். எனவே சேரலாதற்குச் சோழன் மகள் ஈன்றமகன் செங் தட்டுவன் என்ற பிரயோகத்தை மட்டும்வைத்துச் சேரலாதற்குச் செங்குட்டுவனை நேரே தநயனாகவும், சோழனுக்கு அவனை மகள்பிள்ளை பேரனாகவும் கொண்டுதீர வேண்டிய அவசியமேற்படவில்லை. எனவே, சிலப்பதிகாரத்தில்வரும் இம்மகட் சொற்பிரயோகம் பதிற்றுப்பத்துப் பதிகக்குறிப்புக்களோடு முரணு வதாகக் கொள்ள வேண்டா. இப் பதிகத்தொடர்கள் சேரர்குடியில் ஒருதலையாக மருகர் அல்லது வழித் தோன்றல்களையே சட்டுவனவாகவும், அப்பதிகத்தலைவர் சோமன்ன ரூக்குத் தாயாரகார் மருகரேயாவாரென விளக்குவனவாகவும், தாமே தெளியத் தெரிக்கின் றன. சிலப்பதிகாரப் பிரயோகங்களும் இத் ககையமுறையைத்தழுவி அமைவனவாகக்காண்கின்றோம்.

  • சிலப்பதிகாரம் - கொலைக்களக்காதை--கரி-17,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/51&oldid=1444792" இலிருந்து மீள்விக்கப்பட்டது