பக்கம்:சேரர் தாயமுறை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோதா பெற்றதாயும் அறிகின்றோம். இவையெல்லாம் மருமக்கட்டாயத் தொடு பொருந்துவனவன்றி, மக்கட்டாயமுறைக்கு ஒவ்வா. இவற் ஆலும் சேரர்குடியில் மக்கட்டாயம் வழங்கவில்லை என்பது உறுதி பெறுகிறது. (iii) சேரமன்னரை யாண்மே தந்தைக்குத் தாயபென்னாக, மூன்னவற்கு மருகரெனவேகூறமாபின் குறிக்கோள். இதை வலியுறுத்தும் செய்தி இன்னுமொன்று உளது, பதிற்றுப் பத்திலும் மற்றும் பண்டைச்சங்க நூல்கள் பலவற்றிலும் சோ லாக் குறிக்கும் பாட்டுக்கள் பல. அவற்றுள் ஒன்றிலேனும் ஒரு சோனையாவது அவன் தந்தைக்கு மகன் என்று சுட்டுக் குறிப்பே கிடையாது. அதற்குமாறாக முன்னரசரின் தொடர்பு குறிக்கு மிடத்தி லெல்லாம், பாட்டுடைச்சேரனை அம்முன்னோனின் மருகன்” எனவே எல்லாப் பழம்புலவரும் பாண்டும் ஒருபடியே சுட்டிப் போகப் பார்க்கின்றோம். இது மிகவும் சிந்திக்கத்தக்கது. “மருகன்” என்பது வழித்தோன்றல் என்ற பொருளுடைய சொல்லாகையாலும், அடுத்ததந்தையைச் சுட்டாமற் புகழ்சிறந்த மூதாதையரையே சுட்டித் தொடர்புசாட்டுவது புலவர் முறையாகை யாலும், அம்முறையிற் பாட்டுடைத்தலைவரை அம்முன்னோருக்கு மருகரெனவே சுட்டிப்பாடுகின்றனரெனச் சிலர் சமாதானம் காட்ட வாலாம். எனில், சோகுலத்தில் புகழ்படைத்த ஒரு சோலற்குப் புகழ்படைத்த பெருமக்கள் ஒருவருமே எஞ்ஞான்றும் பிறக்கவில்லை யென்றாவது, அடுத்துப் பெரும்புகழ் கொண்ட இருதலை முறைச் சேர வேந்தசைப் பாடப் புலலரில்லை யென்றாவது கொள்ளுவது அசம்பா விதம். பதிற்றுப்பத்துப் பதிகப்பாட்டுக்களை மக்கட்டாயமுறையிற் பொருள் கொள்ளுவோரே இமையவரம்பனுக்குப்பின் அவனை யொத் துப் பாடல் பெறும் புகழ்படைத்த மூவர்மக்கள் இருந்தவரென்றும், அந்துவன் சேரல் முதல் இளஞ்சேரலிரும்பொறைவரை நாலுதலை முறையாக ஒவ்வொரு சேரனுக்கும் பாடப்பெறுஞ் சிறப்புடைய பெருமகனே பிறந்து புகழ்சிறந்துளனென்றும் கூறுகின் றனரே. இப் பெருமக்கள் பலருள் யாரேனும் ஒருவனைப்பாடிய புலவர் கூட அவனை அவன் பெருத்தந்தைக்கு மகனெனச் சுட்டிப் பாடாததற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/60&oldid=1444802" இலிருந்து மீள்விக்கப்பட்டது