பக்கம்:சேரர் தாயமுறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழறை. ஒருதாய்வயிற்று மக்கள் மாற்றாந்தாய்வயிற்றுமக்களை விட நெருங்கிய தொடர்புடையர்; அதனால் சிறந்த உரிமையும் அடைகின்றனர். அற நூல்விதியும் ஆட்சியும் நமது நாட்டில் ஒரு தந்தை மக்கள் பலருள், ஒரு வருக்குச் சகதரரல்லாரை விலக்கி, அவருடன் ஒருவயிற்று தித்தா ரையே அவருக்குச் சிறந்தபிறங்கடைகளாக்கிகிற்கும். எனவே, களங் காய்க் கண்ணிநார்முடிச்சேரலுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சகோதான்; செங்குட்டுவன் மாற்றாந்தாய்மகன். இவர்களெல்லார்க் கும் தந்தை இமையவரம்பனாயின், அவனுக்குப்பின் அவன் மக்கள் முவ ருள் மூத்தவனே சிறந்தபிறப்புரிமையுடன் பட்டமெய்துவன். அவ னுக்குப்பின் அம் மூத்தமகனுடைய வாரிசுக்குப் பட்டமிறக்குவதல் லது, அவ்வாரிசுகளை விலக்கி, முந்தியதந்தையின் வாரிசுகளுக்குப் போவது முறையில்லை செங்குட்டுவன் மூத்தவனாயிருந்தால், முத லில் அவனே முடிபுனைந் திருப்பான். அவனுக்குப்பின் அவன் தநயரும் அவனுக்கு ஒருவயிற்றுத்தம்பியருமே ஆட்சி பெறுவர். இவர்க்கு முன்னே அவன் மாற்றாந்தாய்மக்களுக்கு உரிமையில்லை. ஆனால், செங்குட்டுவனுக்கு முன் நார்முடிச்சேரல் ஆண்டிருப்பதாய் அறிகின் றோம். அகனால் அவனே வயதில் மூத்தவனாகப் பட்டமெய்தினான் என்று தெரிகிறது. அவனுக்குப்பின் அவன் தாயரும், தகயரில்லை பானால் அவனுக்கு ஒருவயிற்றுத்தம்பியான ஆடுகோட்பாட்டுச் சோ லாதனுமே அவன் அரசுபெறுதற்குச் சிறப்புரிமையுடையராலர். இவர்களை விட்டு இடையே செங்குட்டுவன் ஆட்சி பெறுகற்கு அவசிய மும் நியாயமும் இல்லை. ஆனால் மருமக்கட்டாயக்குடியில் இவர்கள் கோச்சோருக்கு பருகாவர். ஆகவே வயதுக்கிரமப்படி இப்மூவரும் ஆட்சிபெற்றுத் தீரவேண்டும். மருகருள் ஒருவயிற்றுதித்ததால் மட்டும் யாருக்கும் எவ்விதச் சிறப்புரிமையும் ஏற்படாது. வயது முறைவரிசையில் மட்டு மே அவரவர் ஆட்சியுரிமை வரையறுக்கப்படும். ஆளும் அரசருக்கு மக்கள் இருந்தாலும் அம்மக்களுக்கு உரிமையில்லையாகவே, ஒருவர் பின்னொருவராய்ச் சோதாரும் சோதரருக்குப்பின் அவர் தம் மருகரு மே ஆட்சிபெறுவர். பதிற்றுப்பத்துப் பதிகங்களால் இவர்மூவரும் முறையே சோநாட்டை ஆண்ட தாயும், இவருன் ஒருவயிற் றுடன் பிறந்தார் இருவர்க்கிடையே ஒருவயிற்றுதியாத செங்குட்டுவன் ஆட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/59&oldid=1444800" இலிருந்து மீள்விக்கப்பட்டது