பக்கம்:சேரர் தாயமுறை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. பகுதி கா. பதிற் ஜப்பத்துப் பாட்டுக்களிலெல்லாம் மருகரென்றே சுட்டவும் பதிகங்களில் மட்டும் 'மகன்' என்று வந்த பிரயோகத்தின் பொருட்பொருத்தம். இனி, இங்கு நாம் பொதுவாக விசாரித்தறிய வேண்டிய செய்தி பிறிதொன்று உண்டு. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் பாட்டுடைக் தலைவனைப் பதிகத்திற்குறித்த வேறு சோவேந்தனுக்கு மேலே கூறிய படி 'மருகன்' என்னாமல் லாளா மகனென்றே கூறிவைத்திருக்கின் றார். ஆகவே இங்கு 'மகன்' எனும் சொற்பொருளை நாம் சிறிது விசாரிப்பது பொருத்தமாகும். பதிற்றுப்பத்து நூலிலும் மற்றச் சங்கச்செய்யுட்களிலும் நிரந்தரமாகப் புலவரெல்லாம் தாம் பாடும் சேரரை அவர் தம் முன்னோருக்கு மருகர் என்றே குறித்துப் போவ தற்கு மாறாக, இப்பதிகப்பாட்டுக்களிலெல்லாம் ஒருபடியாக அவ் வொரு பாட்டுடை ச்சோனையும் மற்றொரு பெயர் குறித்த சேரமன்ன னுக்கு 'மருகன்' என்னாது வாளா 'மகன்' எனவே கூறிவைத் திருப் பது சிந்திக்கத்தக்கது. ஒரு சேரனுக்கு மற்றொருவன் மகன் என்று மட்டும் கூறப்பட்டாலும்கூட, அது கொண்டு பின்னவன் முன்னவ னுக்கு அவன் பெற்ற புதல்வன் என்று ஒருதலையாகத் துணிய இய லாது. அப்படியிருக்க, இங்குப் பதிகங்களெல்லாம் வாளா இரு சேரரை மட்டும் சுட்டி, அவருள் ஒருவனை மற்றவனுக்கு மகன் எனப் பேசவும் இக்லை. ஒவ்வொரு பதிகத்திலும் 'மகன்' எனும் சொல், தனியே இருசேரர்பெயர்க்கிடையில் முறைப்பெயராய் நில்லாமல், இடையே பிநசொற்றொடராக்கம் பெற்றே வருகின்றது. ஆகவே இங்கு இதன் பொருளைச் சிறிது ஊன்றி விசாரிப்பது அவசிய மரகிறது. மகன்' என்ற சொல் தமிழில் (1) ஆடவன், (2) மணவாளன், (3) பெற்றபுதல்வன், (4) பெறாத வழித்தோன்றல் அல்லது வாரிசு எனப் பலபொருளிலும் வருவதாகும். ஆகவே இச்சொல்லுக்கு ஆக்காங்கே இடம் நோக்கிப் பொருள் இன்னதென்று வகுத்துக் கொள்ள வேண்டுவது இன்றியமையாத கடமையாகும். பதிகங்களி லெல்லாம் இச்சொல் எங்கும் நிரக்க என்றி' என்னும் அடையடுத்தே சிற்பதால் இதற்குக் கேவலம் ஆடவன்' அல்லது மனமசன்' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/63&oldid=1444806" இலிருந்து மீள்விக்கப்பட்டது