பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சேற்றில் மனிதர்கள் பாரு? ஏண்டால, அன்னிக்குப் பண்ண கீழன்னு இருந்தப்ப, மிராசுதார் எல்லாந்தாங் குடுத்தாரு கலியாணம் கருமாந்தரம், அது இதுன்னா மிராசுதார் குடுத்தாரு அப்பவும் அடிமைன்னு சொல்லி எகிறினிங்க சட்டம் கொண்டு வந்துட்டாங்க இன்னிக்கு வேறயாச் சுதந்தரமா இருக்கிறீங்க. இப்பவும் அழுவயா?” "என்னா சொதந்தரங்க இப்பவும் இருக்குது, சோத்துக்கு இல்லாத சொதந்தரம்?" "அடிரா செருப்பால. சொதந்தரம் வந்து உங்களுக்கு என்னடா ஒண்னும் வரல? வாய்க் கொளுப்பு வந்திருக்கே? போறது, எங்கனாலும் போயி சம்பாதிக்கிறது! அண்டின எடத்தயே துரத்திட்டுத் திரியறது. பெரிய படிப்பு. சரி சரி, அண்ட கட்டப் போனவ நீ இங்கெங்க வந்த?” "மம்முட்டி கம்பொடிஞ்சி போச்சி, வந்த இத போறேன்." "இன்னிக்கு எல்லாப் பங்கும் சப்ஜாடா முடிச்சுரனும். நாத்துப் பறிக்க ஆரு போனது?" "சித்தையன் போயிருக்கிறான்.” "உம் பொம்பிள சொன்னான்னு முடிக்காம போயிடாத, கள்ளுக்குக் காசு தார, இருந்து முடிக்கனும்." விருத்தாசலம் மீசையைத் திருகிக் கொள்கிறார். ஒரு கீழ்ப்பார்வை குஞ்சிதத்தின் மீது பதிந்து மீளுகிறது. புதுக்குடிச் சங்க அலுவலகத்தில் கூட்டம் தேனிக் கூட்டைப்போல் பொங்கி வழிகிறது. உள்ளே தோரணமாகத் தொங்கும் பிரசுரங்களில் மூவண்ணங்களில் டிராக்டரை ஒட்டும் குண்டுப் பெண்ணும், முகம் மட்டும் தெரியும் கூடுபோன்ற விண்வெளி உடையணிந்த வீரனும் கண்கள் இடுங்கப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சுவரில் குறுந்தாடி லெனினும், பரந்த அடர்தாடி கார்ல்மார்க்ஸும் புடைப்புச் சித்திர முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட கோட்டில் செருகப் பெற்ற ரோஜாவுடன் முழு வடிவாக நேரு புன்னகை புரிகிறார். சுத்தியல் நட்சத்திரங்களுடனும், சந்தனப்பேலா வடிவில் பொங்கும் நெற்கதிர் செண்டுடனும் கதிர் அரிவாள் தொடர்புகொண்டு சுவர் முழுதும் கோலச் சின்னங் காட்டுகிறது. நரை திரைகள், பொங்கும் இளமைகள், ஒயர் பைகளில் வெள்ளைத்துணி மற்றும் டிபன் துக்குகள், சம்புடங்கள் என்று