பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 167 பஸ்ஸைவிட்டு, இறங்கி வருவதை அவர் பார்த்துவிடுகிறார். அவ்ரை அங்கு அவன் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்? திடுக்கிட்டுப் பின் சமாளித்துக் கொள்கிறான். "என்னப்பா? ராத்திரி. திலகம் சொல்லிச்சி. நாந்தா, காலம் கெட்டுக்கிடக்கு தெரிஞ்சி வச்சிட்டு உறவு அது இதுன்னு சொல்லிக் கதவைத் தட்டினாத் திறக்காதன்னு சொல்லிருந்தேன். இப்படித்தானே சொல்லிட்டுக் கொலையே பண்ணிடறாங்க இங்க?. ஓ, பேரணிக்கு வந்திருந்தீங்களாப்பா? நேத்து ஸ்டாக் டேக்கிங். ஒரே வேல, அப்புறந்தான் பேரணின்னு எனக்கே தெரிஞ்சிச்சி. திலகம் சொன்னதும் அவளைக் கோவிச்சிட்டேன். ரொம்ப வருத்தப்பட்டேன்." "அப்படியா? நான் உனக்கு லெட்டர் போட்டிருந்தேனே, வரல?” "லெட்டரா? ஒண்னும் வரலியே? நானே நேத்து வாரப்ப, பேரணிக்கு வர்றவர் இங்க வந்து தங்கிட்டுப் போகக்கூடாதா, வித்தியாசமாகவே நினைச்சுக்கிறாங்களேன்னு வருத்தப் பட்டேன்.” "நீ ஆபீசிலியா இருந்தே?.சரி, உன் தங்கச்சி, வீட்டவிட்டு ஒடிட்டா. தெரியுமாடா?. அன்னிக்கு நீதான கூட்டிட்டு வந்த துரோகிப் பயல, இவ, காலம பொய்யச் சொல்லிட்டு ஒடிப்போனா. வெளில தலகாட்ட முடியல. உனக்குத் தெரியுமாடா?” அவன் திடுக்கிட்டு விடவில்லை. எங்கோ பார்க்கிறான். "எனக்கெப்பிடித் தெரியும்? அவனாக உதவி செய்யிறேன்னு வந்தான். சும்மா துரோகி துரோகின்னு சொல்றதுல என்னப்பா லாபம்? இஷ்டப்பட்டுப் போயிருந்திச்சின்னா நல்லதுதான். சுகமாயிருக்கும்.” "சுகமாயிருக்கும்! அப்பன் ஊருப் பொம்பளை எல்லாம் அழிச்சவன். அவன் மகன் எப்படியிருப்பான்? அவன் ஒழுங்கா வச்சிருப்பானோ, கூட்டிவிட்டுச் சம்பாதிப்பானோ? ரத்தம் கொதிக்கிது...!" "அப்பா, அப்பா.. என்ன இது, இதெல்லாம் இங்கே வச்சிப் பேசாதீங்க! மானேசர் வருவார் இப்ப. நீங்க அப்புறம் வாங்க!” "அப்புறம் வேற வந்து உன் வீட்டு வாசல்ல