பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - சேற்றில் மனிதர்கள் "என்னாடி நிக்கற? எங்க போயிட்டாங்க?" "கிட்டம்மா மாமி வந்து ராத்திரி அழுதிச்சி. ரெண்டு பேரும் காலம எல்லாப் பெண்டு வளயும் சேத்துட்டு, அஸ்தமங்கலம் போலீசு டேசன்ல போயி ஆர்ப்பாட்டம் செய்யப் போறாங்க...” சம்முகம் திகைக்கிறார். “பாட்டியெங்க?" "இங்கதா இந்தப் பொம்புளகளெல்லாம் சேத்துக்கிட்டுப் போகப் போவுது...” "அட? இவளுவளுக்கு இம்புட்டுத் தயிரியம் வந்திடிச்சா? ஆம்புள க எல்லாம் தொலஞ்சிட்டாங்கன்னு இவளுவ கெளம்பிட்டாளுங்களா?” "வேற ஆரு இங்க வந்தது! தேவு வந்தானா?” அம்சு இல்லை என்று தலையை ஆட்டுகிறாள். 'இதென்னடா இது!...” அவர் வாயில் முற்றத்தில் வந்து நிற்கிறார். தண்ணிர் கொண்டுவரும் ருக்மணி பார்த்து விடுகிறாள். "அண்ணன் இத வந்திட்டாரு. என்னாங்க!... நாங்க பொண்டுவள்ளாம் போலீஸ் டேசனுக்குப் போறதுன்னா முடிவெடுத்திருக்கு தண்ணி கொண்டாந்து வெச்சிட்டு, அல்லாம் போறம். நீங்க புள்ள குட்டியப் பாத்திட்டு ஆட்ட பொறுப்பா இருங்க!” -- o "அட... அம்புட்டுத் தயிரியம் வந்திடுச்சா? இதெல்லாம் ஆரு கெளப்பி வுட்டது?” "ஆரு கெளப்பி வுடனும்?. யாருன்னாலும் கெளப்பி வுடனும்னா வருமா! எப்பயும் நீங்கதா போவிய? இப்ப நாங்க போறம். பதினோரு மணி வாக்குல அல்லாம் அஸ்தமங்கலம் ரோட்டில வந்திடுங்கன்னு லட்சுமியக்கா, சொல்லிட்டுப் போச்சி. தலவரு பெஞ்சாதியாச்சே, சொன்னா கேக்கவானாம்?" சம்முகம் உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறார். செவத்தையனும் கோடியான் வீட்டுத் தாத்தாவும் வெயிலில் நிற்கின்றனர். "இப்பத்தா வரீங்களா, மொதலாளி. அல்லாம் போலீஸ் டேஷன் வளச்சிக்கப் போறாங்களாம்? நம்ம பொம்பிளகளுக்கு எம்மாந் தெகிரியம் பாருங்க!”