பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சேற்றில் மனிதர்கள் 'ஏ, என்ன கொளுக்கட்டயா வாயில? கோசம் நல்லா குடுக்கணும்!” என்பான். கூட்டம் இவர்கள் வீட்டு முன் தெருவிலேயே நடப்பது உண்டு. அவளுக்கு இதெல்லாம் தனக்குச் சம்பந்தமில்லை என்ற வெறுப்புத்தான் மேலிடும். உள்ளே வந்து, “காந்தி, கொஞ்சம் தண்ணிகொண்டா' என்று கேட்பான். அந்தச் சாக்கில், "எம் பேச்சு நல்லா இருந்ததா காந்தி?” என்று சிரிப்பான். புதுக்குடியில் இருந்து வரும் போதெல்லாம் அவன்தான் அவளுக்குப் புத்தகம் பத்திரிகை கொண்டுவருவான். ஆனால் பிரபலமான வார மாத ஏடுகளாக அவை இருக்காது. அடித்தள மக்கள், புரட்சி, குமுறல், சுரண்டல், வர்க்கப் பார்வை என்ற சொற்களையே புரட்டி எடுக்கும் கவிதைகள், கட்டுரைகள் இருக்கும். அந்தச் சுவாரசிய வார மாத ஏடுகளைப் படிக்க அவள் வீரமங்கலம்உடையார் வீட்டுக்குத்தான் போக வேண்டும். சரோஜா இவளுக்குத் தோழி. உடையார் பழங்காலத்தில் நிலப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வர். இப்போது பெருங்காயம் வைத்த பாண்டம்போல் அந்த மனம்தான் இருக்கிறது. சரோஜா அவருடைய இளைய மருமகள். அங்கே செல்லத் தடை கிடையாது. சேலையைக் காயப்போட்டு விட்டு, வீரமங்கலம் செல்லவேண்டும் என்ற நினைப்புடன் அவள் வீட்டுக்கு வருகையில், நடுவிட்டில் பொன்னடியான் ஐயாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான். "நீங்க எதுக்கும் அவனக் கொஞ்சம் வார்ன் பண்ணி வையுங்க காம்ரேட் போலீசுக்காரனுக்குச் சந்தேகம்னு புகுந்தா அடில இருக்கிறவனத்தா டவுட் கேசுன்னு புடிச்சுப்போட்டுச் சாத்துவான். இந்த சுடுகாட்டு வழிப்பிரச்சினைக்கு ஒடனே போராட்டம் நடத்தியிருக்கணும். பாடியத் துக்கிட்டுப் போயிருக்கணும். பொண்டுவ வாணான்னிட்டாங்களாம். அட நமக்கு எத்தினியோ பிரச்சன இருக்கு. இப்ப உரவில, பூச்சி மருந்து வில கொறக்கணும்னு உண்ணாவிரதம் இருக்கிறது தீர்மானமாயிருக்கு. பிரச்சினயாயில்ல?” காந்தி? சோறாக்கியாச்சில்ல?. பசியாயிருக்கு...” அவள் பின்புறம் சேலையைத் தொங்கவிட்டுவிட்டு நடுவிட்டில் நிற்காமல் சமையலறைக்குள் செல்கிறாள்.