பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ե: சேற்றில் மனிதர்கள் அப்பத் தெரியும் பசிக்கொடும"யின்னான். நாம இன்னம் கரையேறாமதான் நிக்கிறோம். பெத்தவங்கன்னு ஆயியப்பனைச் சொல்லுகிறோம். மண்ணும் மானமும்தா மனுசனுக்கு பாக்கப் போனா ஆயியப்பன். அதுங்களே பராரியா வுட்டுப் போடவும் மனுசன் என்ன பண்ணுவான்? பஞ்சான குஞ்சும் குடும்பமுமா எடுபட்டு வந்தாங்க. அடியாளுங்க முச்சூடும் அங்கேந்துதா வந்திருந்தானுவ மூலையான்னு இங்கே இருக்கிறானே, அவ யாரு?” 'ஆரு?” "இங்கதா கிளியந்தொறயோட வெள்ளாழத் தெருவில வீடு வாங்கிக்கிட்டிருக்கிறான். அவெ எங்க மிராசு கிட்ட, அடியாளாத்தா வந்தா. இவனும் சந்தனசாமின்னு ஒராளு, நின்னான்னா சொடலமாடன் கணக்க இருப்பா. ரெண்டு வைப்பு, அவளுவளும் வந்து இருந்தாளுவ..." "எங்க?" 'இங்கியேதா, பண்ண வீட்டில வச்சிருந்தானுவ, அப்பல்லாம் இந்த அம்மங்கொளம் மாமுண்டி, தின்னா முளுக்கோளியும் படி அரிசிச்சோறும் திம்பா. சாராயங் குடிக்கமாட்டான், கள்ளுதாங் குடிப்பா, ஆளு இப்பிடித் திம்முனு இருப்பான். நம்ம பொம்பிள சாணி தட்டுறாளே அந்த மதகுக்கு இந்தண்ட மிராசு அடியாளுவ, நாங்க அந்தப் பக்கம் அரிவா, மம்முட்டி, கம்புன்னு கெடச்சதெல்லாம் வச்சிட்டு வந்தது வருதுன்னு நிக்கிறம். சந்தனச்சாமி இந்தாண்ட பூந்து வார, தடி சும்மா சுழலுறது. மாமுண்டி பாஞ்சா, ஒரே வெட்டு. இந்தப்பய முலையான், அப்ப எடுத்த ஒட்டம், பெருமா கோயில் மூலையில போயி ஒட்டிக்கிட்டாம் பாரு.. அவனுக்குப் பேரே தெரியாம மூலையான்னே பேரு வந்திச்சி..." கிழவர் சிரிக்கிறார். "நேத்து முந்தாநா கூட வந்திட்டுப் போனாரு...” "நீங்க எந்த மாமுண்டியச் சொல்றீங்க தாத்தா?. இப்ப எலக்ஷனுக்கு மின்ன... கொலையாகிப் போனாரே, அவரா?” "ஆமா. அப்ப போலீசில புடிச்சி கேஸ் நடந்து ஏழு வருசம் உள்ள இருந்துட்டு வந்தா. அவனத்தான் குத்திப் போட்டானுவ... எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ போற. அது பாரத யுத்தம்டான்னு நம்ம ஐயுரு சொல்லுவாரு. சந்தன சாமி