பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சேற்றில் மனிதர்கள் போறாங்க, பொண்டுவ. இப்ப காலம் ரொம்பக் கருப்பா இருக்கு மேச்சாதிப் பொண்டுவ அல்லாருமே நடவுக்குப் போறாங்க. ஆனா இங்க ஒளுக்கம் கொறயக் கூடாது பாரு?" இவர் நிறுத்தும் நேரத்தில் லட்சுமி கூடையில் சாமான் களுடன் கொல்லை வழியாக உள்ளே நுழைந்திருக்கிறாள். சம்முகம் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்கிறார். “என்ன லட்சுமி! நடவா?” அவள் தோளைப் போர்த்துக்கொண்டு வாயிற்படியில் சார்ந்து "ஆமாம், வாங்க, அம்மால்லாம் சொகமா?” என்று கேட்கிறாள். "எல்லாம் சொகம். எங்க சின்னக்குட்டி? அதும் நடவுக்குப் போயிருக்கா?” --- "ஆமாங்க. நாயக்கர் வூட்டுக்குப் போயிட்டு வருவா...” "கொஞ்சம் எச்சரிச்சி வையி. இப்ப, கோயில் விசயமா வந்தோம். எல்லாம் புதுப்பிச்சி, விழாவ நல்லபடியா எடுக்க ணும்னு ஏற்பாடு. சம்முகத்துக்கிட்டச் சொல்லியிருக்கிறேன். என்ன சாமியில்லன்னு பேசுனப்ப கூட, பொண்டுவ வுட மாட்டீங்க. நீங்க போயி கும்பிட்டு வந்து ஆம்புளகளுக்குத் திருநீறு குங்குமம் கொண்டாந்து கொடுப்பீங்க. இப்ப இத்தினி வருசத்துக்குப் பெறகு விழா விமரிசயா எடுக்கணும்னிருக்கு. பொண்டுவ எல்லாரிட்டையும் சொல்லிடு. மகிலெடுத்திட்டு விமரிசயா குலவ இட்டுட்டு வந்து பொங்கல் வய்க்கணும். பொண்டுவ இல்லாம அம்மன் விழா சிறப்பு இல்ல.” - "வச்சிட்டாப் போச்சி...” உள்ளே சென்று தட்டில் வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு வருகிறாள். "வெத்தில போடுங்க...!” விருத்தாசலம் பிள்ளை மகிழ்ந்து வெற்றிலை போடுகிறார்; மூலையானுக்கு நகர்த்துகிறார். "இவருக்கு, காலுதா இப்பிடி வீங்கிக்கெடக்கு. வண்டி எதுனாலும் கிடச்சா, ஆசுபத்திரிக்கின்னாலும் கூட்டிட்டுப் போயி பாக்கலாம். காச்சலும் இருக்கு. கெடந்து அவதிப்படுறாங்க...” "அதா..." புளிச்சென்று வாயிலில் வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து வருகிறார். 'வண்டி இருக்கு, ஆனா மாடெல்லாம்