பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 89 செய்யப் பார்க்கிறாள். 'முரங்கக் கீரதா ஆட்டுக்கு...” "ஆட்டுக்கு முருங்கக் கீரயா? அதுக்கு மூட்ட என்னாத் துக்கு? இந்த வீச்ச சமாசாரமெல்லாம் பஸ்ல தூக்கிட்டுப் போகக்கூடாது தெரியுமில்ல?” "பஸ்ஸில தூக்கிட்டுப் போகக்கூடாதுன்னா முதுவிலி யா துரக்கிட்டுப் போக?” - "போ. வாசம் உன்னோடயே வரும்!. இங்க பாரு. எடு மூட்டய கெளவீ!...” "அட போய்யா! சும்மா ஆட்டுக்குத் தழ கொண்டிட்டுப் போற... வாசம் வருதா?” "தழவாசனயா இது?. சரி சரி ஒரு ரூபா எடு!” ‘'எதுக்கு?” "வாசம் வருதில்ல? அதுக்கு!” "ஒரு ரூவா குடுத்தா வாசம் போயிடுமா...?” "ஏ கெளவீ! என்னா எதிர்த்துப் பேசுற இல்லாட்டி உம் மூட்டையோட எறக்கி விட்டிருவேன்! கறிவாட்டு மூட்டய வச்சிட்டு. மூக்கத் துளக்கிது!” கிழவி மடியில் சுருக்குப் பையிலிருந்து எண்ணி இரண்டுகால் ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறாள். "என்னா? இன்னும் அம்பது பைசா குடு!” "இல்ல ராசா, இதா இருக்கு." "அட அவுராதம் ஒரு ரூவாய்க்கிக் குறஞ்சி இல்ல கெளவி. இதென்ன வம்மாப் போச்சி!” இந்த விவகாரத்தில் மாவூர் நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றதே தெரியவில்லை. மாவூர் என்ற பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு காந்தி பரபரப்புடன் இறங்குகிறாள். கிருஷ்ண விலாஸ் காபி ஹோட்டல் பெரியதாகவே இருக்கிறது. அருகில் ஒரு மிட்டாய்க் கடை. ஆப்பிள் சரம் குத்தித் தொங்க விட்டிருக்கும் வெற்றிலைப் பாக்குக்கடை. இடப்பக்கம் முத்தாறு ஒடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுக் கப்பால் வயல்களில் பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் செழிப்பு. எல்லா இடங்களிலும் நடவாகவே இருக்கையில் இங்கு அதற்கு முன் பயிர் கதிர்காணத் தொடங்கிவிட்டதே! பசுமையினிடையே ஆங்காங்கு காணும் அறிவிப்புப் பலகைகள் மாவூர் கிராமத்தின் மாதிரி விவசாயப் பண்ணை