பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழி தொழில் 183 அவற்னதப் பட்டார்கள்; அடிபட்டார்சன்; சட்டானை சுளைப் பறிகொடுத்தார்கள்; மான;b tunரியாதையைப். 4_2 கொடுத்தார்கள்....... அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிக்கு நகரசபை எந்தவித முயற்சியும் செய்யவில்லை. லோக்கல் சேரர்) சிப்பந்திகள் என்ற பேத்தப் பெயரே தவிர, அவர் களுக்கு (வேலை நிரந்தர உத்தரவாதமோ, பாதுகாப்பு நிதி வசதியோ, சம்பள உயர்வோ -எ துவும் கிடையாது. எனவே இந்த நிலையில் நகரசபை உத்தியோகஸ்தர்களுக்கு அவ்வப்போது எழும் விருப்பு, வெறுப்புக்களுக்காளாகி, சிலருக்குச் சீட்டுக் கிழிவதும் உண்டு. நகரசபையினர் அவர்களுக்கு வஸ்திர தானம் செய்து புண்ணியம் சம்பாதிப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். எனினும் அந்த வஸ்திரங்களோ ஆளுக்கு - ஒரு ஜோடி; அதுவும் - மாமாங்கத்துக்கு மாமாங்கம். சுருங்கச் சொன்னால் நகரத்தை நரகமாக்காமல் சுத்தம் செய்து அழகுபடுத்தும் அந்தத் தொழிலாளர்கள் கிட்டும் நரகக் குழியிலே தான். வாழ்ந்து வந்தார்கள், . . , . இந்த நிலைமைகளைச் சமாளிக்க முடியா தபோது தான், அந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையின் பலத்தை , தமது உழைப்பின் சக்தியை உணர்ந்தார்கள்; ஒன்றுபட்டு நின்று உரிமைக்காகப் போராடினார்கள். பஞ்சப்படி, சம்புன உயர்வு, புதிய உ.ை.. , வேலை நிரந்தரம், குடியிருப்;+ :சதி, நீக்கப்பட்ட தொழிலாளரை மீண்டும் வேலைக்கு எடுத்தல் முதலிய கோரிக்கைகளுக்காக, நகரசபை நிர்வாகிகளோடும் லேபர் அதிகாரிகளோடும் வாய் சலிக்குமட்டும் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார்கள், அவற்றால் எந்தவிதப் பயனும் விளையவில்லை. எனவேதான் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடமுள்ள ஒரே ஆயுதத்தை-இறுதி ஆயுதத் தைப் பிரயோகிக்கத் துணிந்தார்கள். வேலை நிறுத்தம் !