பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இழி தொழில் களும் குழந்தைகளும் அடி.களைத் தாங்கமாட்டாமல் அவதிக் கொண்டு ஓடினார்கள்; மண்டையி€லிருந்து தெறித்துப் 1.74ம் ரத்தத்தோடு பல தொழிலாளர்கள் அடிகளைத் தாங்கிக் கொண்டு கீழே விழுந்தார்கள்; அந்தத் தொழில."ளர்கள் ஏந்தி வந்த தொழிற்சங்கப் பதாகை முறிந்து கீழே விழுந்தது. காயம்பட்டுக் கிடந்த அந்தக் கிழவனின் 'கடைவாயிலிருந்து ஒழுகிய செங்குருதி அந்தப் பதாகையை நனைத்து நினைத்து அதை மேலும் சிவப்பாக்கிக்கொண்டிருந்தது. சில நிமிஷ நேரத்துக்குள் போலிஸார் அரங்கு “அமைதில நிலை நாட்டினார்கள்!?. தாக்குதலை நடத்தி முடித்த போலீஸார் சேர்மன் பிள்ளைவாளைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்; சேர்மன் பிள்ளைவாளும் வெற்றிக் களிப்புத் துகாடும் திருமுக விலாசத்தோடு குறுநகை பூத்தார். அவர்களுக்கு முன்னால் அந்தப் போர்க்கவா அலங்கோலம் செக்கச் சிவந்து தோன்றியது. சேர்மன் பிள்ளைவாள் திருவாளர் தில்லைத் தாண்ட வராயர். கம்பீரமான குரலில் தம் சகாக்களை நோக்கி ஆணையிட்டார்: ம்-செல்லுங்கள் முன்னே !** திடீரென்று எழுந்த அந்த ஆணைச் சொல் அங்கு நிலவிய அந்தச் சுடுகாட்டு அமைதியைப் பிளந்து கொண்டு. எதி ரொலித்தது. அந்த எதிரொலியில் தாக்குண்ட முன்* Sணியில் நின்ற அந்த ஊழியன் தனது வலது காலைத் தன்னையுமறி யாமல் விறுட்டென்று எட்டு எடுத்து முன் வைத்தான். ஆனால் அந்தக் காலைப் பதித்ததுமே ஏற்பட்ட உணர்ச்சி, அவன் உடம்பில் மின்சாரத் தாக்குதலின் அக்கினி வேகத்தைப்போல் தாக்கி அந்தக் காலை உதறியெறிந்தது. அவனது காவல் நழுக் கென்று மிதிபட்டு வழுக்கியது. அந்தக் கிழவனின் உயிரற்ற சடலம்? அதைக் கண்டதுமே அவன் கண்களும் மனமும் சுளுக்கிச் சுண்டுவது போலிருந்தன. 'என்' 'சவத்தின் மீது நடந்து