பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை அந்தப் பிச்சைக் குரல் கேட்டு திரும்பினேன், அந்தச் 'சவம்' க்யூவரிசையிலுள்ள ஒவ்வொருவரிடமும் பச்சை கேட்டான்; வாய் நோக்கி வழியும் சளியையும் நக்கிக் கொண்டான். எதிர்த்த சரகில் *ஓம் மச்சாவி வந்துட்டுது' என்ற குரல் கேட்டது. திரும்பினேன். அடுப்பிலிருந்து சோற்றை இறக்கி வைத்த யுவதி தலையைத் திருப்பினாள். ரிக்ஷாவை ஓரமாய் நிறுத்தி விட்டு, மனைவியை நோக்கி நெருங்கி வந்தான் 'மச்சாவி.' அவள் முன் குந்தி இருந்து, அண்ணத்தை இன்னம் வரலியா?” என்று கேட்டுக் கொண்டே “சரி- சாதத்தைப் போடு, நான் போவணும்" என்றான். 'இப்பத்தானே வந்தே. அதுக்குள்ளாச்சும் பூணும்ங் கிறீயே! என்று மெதுவாகச் சொன்னாள் யுவதி. அதற்குள் திண்ணையிலிருந்தவள் - குழந்தையை நிழ லோரமாய்ப் படுக்கப் போட்டுவிட்டு இறங்கிவந்தாள். “ஏங்கக்கா. இது போனதாம். நானு , சாதத்தைப் போடட்டுமா?** என்றாள் யுவதி, போடு, போடு, நாலு காசு கிடக்கிறதைக் கெடுத்துப் புடாதே” என்றாள் பரட்டைத்தலை அக்கா, அந்த இளம் தம்பதிகள் - திண்கையில் ஒதுங்கினர்; சாக்குத் திரைக்குப் பின்னால் அவன் உட்கார்ந்தான். அவள் சாதத்தை எமைல் தட்டில் போட்டாள். அவன் தன் மடியிலிருந்த மஞ்சட் சிவந்திப் பூவை மெள்ள அவள் தலையில் ரகசியமாகச் சூட்டினான். யுவதி தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, வெள், ளாடாதே, அக்கா பாத்திரும்!” என்றாள். .

  • அடி என் குஞ்சே!- அசல் சிந்தாமணி மாதிரி

இருக்கியே!