பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 நீயும் நானும் "பார்க்க முடியாது!” என்று கோபாவேசமாய் வழி மறித்தாள் மாரி. நான் மூன்றாவது பட்டையையும் எடுத்தெறிந்து விட்டேன், அந்தப் போலீஸ்காரன் அவளைத் தள்ளி விட்டு முன்வர எண்ணினான். அவளோ நீ உள்ளே போறதைப் பார்த்துப்புடுதேன்” என்று முண்டி விழுந்து வழிமறித்தாள். நான் நாலாவது பட்டையைத் தொட்டுவிட்டேன். அதையும் எடுத்து விட்டால், வெளியே தாவிவிட முடியும்!.... மாரியின் வழி மறிப்பு ஓரளவுக்குத்தான் பலித்தது. மறு கலாம் நான் பிடிபட்டிருப்பேன், ஆனால், அவள் செய்த அந்தக் காரியம்! திடீர் என்று ஒரு சப்தம், கிரீச் சென்ற கூக்குரல்.... ஐயோ என்ற அலறல்!- அப்பா! என்ன கோரம்! மாரி, தான் பெற்ற பிள்ளையைத் தன் கையாலேயே நிலைக் கதவில் மோதி யறைந்தாள்! என் கண்கள் சுளுக்குவது போலிருந்தன. மறுகணம் "ஐயோ! குழந்தையைக் கொன்னுட்டானே பாவி, கொன்னுட்டாளே என்று ஓலமிட்டாள் மாரி. உடைபெற்ற முட்டையின் கருச் சிதைவு போல அந்த பாலகனின் மண்டை சிதறி, கூழும் நுரையுமாய் சிந்திப் பரவி யிருந்தது. செக்கச் சிவந்த ரத்தம் தரையிலும், சார்ஜெண்டின் உடையிலும் நிலையிலும் தெறித்திருந்தது நான் புட்டையை எடுத்துவிட்டேன். தலையை உள்ளே கொடுத்தேன். அதற்குள் முற்றத்தில் அக்கம் பக்கத்துத் தொழிலாளர் கள் எல்லாம் மாரியின் குரல் கேட்டு ஓடிவந்தனர். அந்தச் சார்ஜெண்டும் போலீசும் திகைத்து மரமாய் நின்றனர். இம் மாதிரியான தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை,