பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் - 37 வாய் விட்டுச் சிரிக்கவும் செய்தார்கள். அவனது நிலையைக் கண்டு அடுக்கு மாளிகைகளிலே தொங்கும் சாளரத் திரைகள் சிரித்தன; ஜவுளிக் கடைகளில் தொங்கும் ஜரிகைத் துகில்கள் சிரித்தன; சூரிய ஸ்நான மங்கையர் சித்திரங்கள் சிரித்தன; பக்கத்துச் சர்க்கார் கட்டிடத்தில் பறந்து கொண்டிருந்த கொடியும் சேர்ந்து சிரித்தது',.. அவன் கண்களி41) எதுவும் படவில்லை; காதில் எதுவும் கேட்கவில்லை, கடைசியில் ஒரே ஒருவனின் திருக் கண்களின் (முழுக் கவனமும் அவன்டால் திரும்பியது. யார ...ா நீ? இதென்ன ரோடா, பள்ளியறையா? எழுந் திரு, ஊமைப் பாசாங்கா பண்றே? அவனது ஒடுங்கிய வயிற்றில் எட்டி உதைத்து எழுப்பிக் கொண்டே சத்தமிட்டான், சட்டத்தின் பாது காவலனே தேரு போலீஸ்காரன். ' ' * * " ம்பா, கையெழுத்துப் போடத் தெரியுமா?" போலீஸ் ரைட்டர் அலனை விசாரித்துக் குற்றப் பதிவு செய்து முடித்த பின்னர், அவனை நோக்கிக் கேட்டார். அவன் தெரியும் என்ற பாவனையில் தலையை அசைத்தான். நடு ரோட்டில் நிர்வாணமாகக் கிடந்து, பிரஜைகளுக்குத் தொல்லை கொடுத்ததாக, அவன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. கைகள் நடுநடுங்க அவன் கையெழுத்திடுவதைப் பரிதாபகரமாகப் பார்த்துக்கொண்டு நின்றான் நம்பர் முன்ஜாத்தி மூன்று அவன் நின்ற ஆபாசக் கோலத்தைக் காணச் சிக்காமல், முன்னூத்தி மூன்று தன் தலையில் பனிக் காகக் கட்டியிருந்த சிட்டுத் துண்டை அவிழ்த்து அவனைக் கட்டிக் கொள்ளச் செய்தான். 'என்ன, தீரி நாட்திரீ! உமக்கு இவன் புண்ணியத்திலே ஒரு துண்டுக்குக் கெட்ட காலம் புடிச்சு தாக்கும்?" என்று