பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக்கிளி 57 நான், “என்னப்பா; உன் தீர்ப்பு என்ன ஆச்சி! ?” என்று கேட்டேன், . அந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. “என்ன சாமி. அந்தப் படுவாப்பயலைத் தீர்த்துப் புடனும்னு தான் நெனைச்சேன். வெட்டு என்ன வோ தவறிப் பூடிச்சி. இங்கே உள்ளே வந்து பதினாலு கம்பியையும் எண்ணி யாச்சி. ஏழு வருஷம் போட்டுட்டாங்க. ஆனா இந்த ஏழு. வருஷத்தையும் ஏழு நாளாத் தவம் கிடந்திட்டு, பழையபடி அந்தப் பய மவனை வேலையைச் சாய்க்காட்டா நான் கொண் டயங் கோட்டையனா சாமி? இதனாலே கழுத்துக்கே கயிறு வந்தாலும் சரிதான்,” ' ' .

  • 'சிந்தாமணித் தேவனின் இந்தப் பதிலைக் கேட்டதும்,

அன்றைக்கு என் மனசிலே * கொலைகாரப் பாவி : என்று திட்டத்தான் தோன்றியது. ஆனால் இன்றைக்கோ-~ விடுதலை யடைந்து சென்று நாளை என்ன பண்ணு வது என்ற : யோசனை இல்லாமல் தவிக்கும் - இன்று இரவிலோ-அவனுடைய வர்மப் பேச்சில் அர்த்த சஷ்டி, இருப்பதாகத் தோன்றியது. தேச சுதந்திரத்தைக் குறிக் கோளாகக் கொண்ட தேசிய வாதிகள் பலருடைய கனவுகள் பதவியோடேயே நின்று விடுகின்றன. ஆளுல் இந்தப் பாமரனின் குறிக்கோள் எதிரியின் உயிரை வாங்குவது தான். 'ஏழு வருஷம் போட்டாலும் நெஞ்சம் கலங்காமல் சிறைக்குள்ளே எப்போதோ வரப்போகும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கித் தவம் கிடக்கிறானாம், தவம்.

  • கோழைத் தவத்தைவிட பலாத்காரமே சிறந்தது ?

என்ற மகாத்மா காந்தியடிகள் கூற்றும் எனக்கு அப்போது தான் புரிந்தது.