பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு 6; நுழைந்தவர் மாதிரி இருந்தது. வாழ்க்கையில் அடிபட்ட அனுபவ பாவம் முகத்தில் கொஞ்சம்கூட இல்லை. வெறும் ஏட்டுச் சுரை... கதாசிரியனான எனக்கு அவரை இப்படியெல்லாம் எடை போடுவது புதிதில்லை. இருந்தாலும் நாமென்ன அவருக்குப் பெண்ணா கொடுக்கப் போகிறோம்? எனவே '. அந்தப் பாத்திரத்தின் குண நல விமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, டிக்கட்டை எடுத்து வைத்துக் கொண்டேன். “ஸார், டிக்கட். . பலகைமீது படுத்திருந்த மனிதரைத் தட்டி எழுப்பினார் பரிசோதகர். படுத்திருந்த ஆசாமி சாவதானமாக எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு, பர்சை எடுத்து, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார், ' “டிக்கட் எங்கே ?” . “எடுக்கலை." சரி, எங்கிருந்து வருகிறீர்கள்?" -

    • சென்னை தான். திருச்சி போகணும். செங்கல் பட்டி

லிருந்தே எழுதிக் கொடுங்கள். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் !” ' டிக்கட் பரிசோதகர் ஒரு கணம் பதில் பேசவில்லை. அந்தக் கதாபாத்திரத்தைச் சோதிக்கக்கூடிய கட்டம் வேந்து விட்டது என்று என் கதை மனம் என்னுள் கூறியது. செங்கல் பட்டிலிருந்து எழுதினால், சென்னையிலிருந்து டிக்கட் இல்லாமல் வந்ததற்கு இரட்டிப்புக் கட்டணம் வாங்க வேண் டாம். அதற்குப் பிரதியாக, காலோ, அரையே!? டிக்கட் பரிசோதகர் எடுத்துக் கொள்ளலாம். அதாவது அந்த மனிதர் பரிசோதகரை லஞ்சம் கொடுத்துத் தமக்குச் சகாயம் செய்யச் சொல்கிறார். இந்தப் பரிசோதகர் அதை ஏற்பாரா? சேச்சே ; ஏற்கமாட்டார்...!