பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

திருநாவூக்கரசர்

"இழுக்கலுடையுழியூற்றுக்கோலற்றே, ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்"1 ' என்பது திருக்குறள். திருநாவுக்கரசர், '"நினைவார்க்கெலாம் ஊற்றுத்தண்டொப்பர் போல் ஒற்றியூரரே?"2என்றார். இவைபோலும்பலதிருக்குறட்கருத்துக்களையும் கருத்துடைய சொற்றொடர்களையும் இடை யிடையே தொடுத்துப்பாடும்

நம் திருநாவுக்கரசர் அத்திருக்குறட்காலத்தைஅடுத்து வந்த சங்க இலக்கியக்கருத்  துக்களையும் கவினுடைய சொற்றொடர்களையும் கையாளுதலில் பின்னிடுகின்றார் இல்லை. பிறப்புமாறி மறுபிறப் பெய்துங்கால், ஒருவர்க்கு மறதியுண்டாகும் எனச் சங்கச் சான்றோர் கூறுவர்;  "சாதல் அஞ்சேன் அஞ்சுவல், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவதாயின், மறக்குவென் கொல் என் காதலன் எனவே"3 என வருவது காண்க. இக்கருத்தைத் திருநாவுக்கரசர்,
"துறக்கப்படாத இவ்வுடலத்
  துறந்து வெந்தூதுவரோடு 
இறப்பன் இறந்தால் இருவிசும்
  பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி 
  வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பென் கொலோ,என்று என்
 உள்ளம் கிடந்து மறுகிடுமே"4

என்று கூறுகின்றார் இறந்தார். எய்தும் மேலுலகைச் சங்கச் சான்றோர் வாராவுலகம் என்பதுவழக்கம்; "நீளிலே எஃகம் அறுத்த உடம்பொடு, வாராவுலகம் புகுதல் ஒன்றெனப் படை தொட்டனனே குருசில்"5 எனப் பரணர் ______________________________ l. குறள். 415 2.திருநா . 138:3 3 நற்றிணை 397 4 திரு நா. 114:8. இக் கருத்தையே பிறிதோரிடத்தில், '"மருவாகி நின் னடியே மறவேன் அம்மான் மறித்தொருகால் பிறப்புண்டேல் மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே :- (239 : 6.) என்று கூறுவர்

5.   புறம். 341.