பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:176


திருநாவுக்கரசர் கண்ணப்பர்க்கு இறைவன் அருள்புரிந்த வரலாற்றை ஒரு திருப்பாட்டில் ஒதலுற்று, "ஒருகணை யிடந்து அங்கு அப்பத் தவப்பெருந் தேவுசெய்தார் சாய்க்காடு மேவினாரே"1 என்றார் , தவப்பெருந்தேவு செய்தார் என்ற இத்தொடரையே பெயராகக் கொண்ட சான்றோரும் திருக்காளத்தியில் இருந்திருக்கின்றார் ; இதனை, "திருக்காளத்தியாண்டார் தவப்பெருந்தேவு செய்தார் எழுத்து”2என வருதலால்அறியலாம். திருமழபாடியில் இறைவனைஅடிகள்"மழபாடிவயிரத்தூணே"3என்றாராக, அதனையே தமக்குப் பெயராகக் கொண்டார் ஒருவர், "ஆனை மங்கல முடையான் பஞ்சநதி வயிரத்தூண் 4' என்று திருமழபாடிக் கல்வெட்டொன்றில் குறிக்கப்படுகின்றார். தில்லையிற் கூத்தப்பெருமானைக்கண்டு பரவிய திருநாவுக்கரசடிகள் "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே" 5என்றாராக, எடுத்த பொற்பாதம் என்ற தொடரை நயந்த சான்றோர் ஒருவர், தில்லையில் ஊர்க்கணக்கராயிருந்திருக் கிறார்; இதனை, "இவை அருளால் ஊர்க்கணக்கு எடுத்த பொற்பாதப்பிரியன் எழுத்து"6 எனத் தில்லைக்கோயிற் கல்வெட்டுக் கூறுவது காணலாம். இவ்வாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகத் தொடர்கள் பல ஆடவர்க்கும் மகளிர்க்கும் இனிய பெயர்களாய் அழகு செய்திருக்கும் காட்சி கல்வெட்டுக்களில் மணிபோல் ஆங்காங்குக் கிடந்து இன்பஞ் செய்கின்றன என்று எடுத்தோதியமைகின்றாம். ______________________________ 1. திருநா. 65 : 8. 2. S.I.I. Vol.VIII.No. 497 3. திருநா. 254 : 1. 4. S. I. I. Vol. V. No. 632. 5. திருநா. 81 : 4. 6. S. I. I. Vol. III. No. 43.