பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{<4.><ஐயடிகள்காடவர்கோன்b/>}} /



<bவரலாறுb/>

  ஐயடிகள் காடவர்கோன், பதினோராம் திருமுறையிற் காணப்படும் நாயன்மார்களுள் ஒருவர். காடவர்கோன் எனக் குறிக்கப்படுவது ஒன்றே இவர் பல்லவர் குலத்து வேந்தருள் ஒருவர் என்பதை நன்கு புலப்படுத்துகிறது.
 காஞ்சிமா நகர்க்கண் இருந்து அரசு மேம்பட்ட பல்லவருள் சிம்மவிஷ்ணுவன்மன் வழிவந்த மன்னர் நம் ஐயடிகள் காடவர்கோன். இவருக்கு முன்னே காஞ்சியிலிருந்து அரசு புரிந்தவன் இரண்டாம் மகேந்திரவன்மன். ஐயடிகளது பெயர் செப்பேடுகளில் பரமேச்சுர வன்மன் என்றே காணப்படும். இவர் ஆட்சிக்கு வந்த சின்னாட் களுக்கெல்லாம் சளுக்கி வேந்தனை முதல் விக்கிரமாதித் தனோடு பெருவளநல்லூர் என்னும் இடத்தே கடும்போர் உடற்றிவெற்றிபெற்றார். அதன் பயனாகச் சளுக்கிவேந்தன் கைப்பற்றியிருந்த பகுதியையும் இவர் அடிப்படுத்தினர். சிவபெருமான்பால் பேரன்பு கொண்ட இவர், நாட்டில் பலவிடங்களில் திருக்கோயில் திருப்பணி செய்தார். கூரம் என்னுமிடத்தில் சிவன்கோயில் ஒன்றைக் கட்டி அதற்குத் தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய "வித்தியா வினிதன்" என்பதனால் வித்தியாவினித பரமேச்சுரபல் லவனிச்சுரம் என்று பெயரிட்டார். அவ்வூருக்கும் பரமேச்சுரமங்கலம் என்று பெயர் தரப்பட்டது. பின்பு, அவ்வூரை இருபத்தைந்து கூறாக்கி, அவற்றுள் மூன்று கூறுகளைக் கோயிற் பணிபுரியும் அனந்தசிவம், புல்லசருமன் என்ற இருவர்க்கும், ஒரு கூற்றைப் பாரதம் படிப்போருக்கும், ஒரு கூற்றைப் பாரதம் படிக்கும் மண்டலத்தில் நீர் தெளித்து விளக்கேற்றி வைப்பதற்கும் ஏனையவற்றை இருபது சதுர்வேதிகட்கும் அளித்தார். இவ்வகையில் இவர்க்கு ஆண்டு முதிரவே அரசியலில் உவர்ப்பு உண்டாயிற்று. அதனால், இவர் தன் மகன் நரசிங்க வன்மனுக்கு-

SIV-12