பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

ஐயடிகள்காடவர்கோன்


வாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவிடைவாய், திரு நெடுங்களம், குழித்தண்டலை, திருவானைக்கா, திருமயிலை, உஞ்சேனை மாகாளம், வளைகுளம், திருச்சாய்க்காடு, திரும்ப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராமலை, திருமழபாடி, திருவாப்பாடி திருவேகம்பம், திருப்பனந்தாள், திருவொற்றி யூர், திருமயானம் என்பன. இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு திருவெண்பாவாற் குறிக்கப் பெறுகின்றது : இவ் வெண்பாக்களில் பத்தாம் திருவெண்பாவும் இருபத்து மூன்றாம் திருவெண்பாவும் பொது. இவற்றுள் பத்தாம் திருவெண்பா, - "படிமுழுதும் வெண்குடைக்

  கீழ்ப் பாரெலாம் ஆண்ட 
 முடியரசர் செல்வத்துமும்மை-
 கடியிலங்கு
 தோடேந்து கொன்றையந்தார்ச்
 சோதிக்குத் தொண்டுபட்டு 
 ஓடு ஏந்தி உண்பது உறும் "1 என வருவது. பாரெல்லாம் ஆளும் முடியரசர் செல்வத்தினும் பரமசிவனுக்குத் தொண்டுபட்டு ஓடேந்தி இரந்துண்பது மும்மை நலம் தருவதாம் என்ற இக்கருத்தையே, திருவொற்றியூரைப் பாடிய திருவெண்பாவில், ஒற்றியூர் இறைவனை வணங்கி, "இரந்துண்டு இருக்கப்பெறின்,"  "தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு, எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன்"2 என வேறு வகையில் வைத்து வற்புறுத்துகின்றார். இதனை வியந்து கண்ட நம்பி யாண்டார் நம்பி, "முடியரசாம் அத்திற்கு மும்மை நன்று ஆள் அரற்காய் ஐயமேற்றல் என்னும் பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம் பல்லவனே"'3 என்று கூறுவாராயினர்.

ஏனை இருபத்து மூன்றாம் திருவெண்பா, இறைவன் திருப்புகழ் பாடும் பாட்டரவம் கேட்ட பகல் செய்யும் இன் பத்தை, வெண்குடைக் கீழ் வீற்றிருந்த செல்வந்தானும்- ______________________________ 1.க்ஷேத்திரத் திருவெண்பா. 10. 2. ஷ. 22. 3திருத்தொண்டர்திருவந்தாதி 56

    ≠ ≠