பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பியாரூரர்

205

திறை செலுத்த மறுத்தனர் பல்லவர்களுள் தந்திவர்மன் (780 - 830) ஆட்சிக் காலத்தில்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும்; ஆகவே அடிகள் தந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி. பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டும்” என்பது.

இதுபற்றி ஆராய்ச்சி செய்த திரு. பண்டாரத்தாரவர்கள், “அடிகள் தம் காலத்துப் பல்லவமன்னன் போர் வலிமை. யற்றவன் என்றாதல், அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறைகொடுக்க மறுத்தனர் என்றாதல் அப்பாடலில் கூறினரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத் தெம்பெருமான் அருள் புரிபவராகவும் அவனோடு முரணிப் பகைஞராயினோர்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும். இருந்துள்ளமையை நன்குவிளக்கி அம்மன்னனது ஒப்புயர்வற்ற சிவபத்தியின் மாட்சியைத் தெரிவித்துள்ளார்; ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின், அப்பெரியார் தந்தி வர்மப் பல்லவன் காலத்தினரல்லர் என்பது தெளிவாதல் காண்க” [1]" என்று கூறியுள்ளார்.

இனி, டாக்டர் மீனாட்சி யென்பார், சுந்தரரைக் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் எனப் பொதுவாகக் கூறுவர். அதற்கு அவர்பாடிய திருத்தொண்டத் தொகையில் “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”[2]” என்பது சான்றாகக் காட்டப்படுகிறது காடவர் கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற் சிங்கன் சுந்தரர் காலத்துப் பல்லவ வேந்தன்; இதனை வற்புறுத்தும் வகையில் பின்கண்ட முடிபுகள் வற்புறுத்தப் பட வேண்டியனவாகும். முதலாவது இக் கழற்சிங்கன் ஒரு சிறந்த வேந்தகைவும் அவனுடைய ஆட்சி நலம் கடல் கடந்து சென்றிருந்ததாகவும் துணியவேண்டும்; இரண்டாவது, கழற்சிங்கன் எனப்படுவதால் இப்பல்லவ வேந்தன்


  1. தமிழ்ப்பொழில். Vol. 111 பக். 205.
  2. 2. சுந். தே. 39 : 9.