பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

239

 வனங்கள் திருக்காளத்தி1, திருப் பாலைவனம்,2 முதலிய இடங்களிலும், மடங்கள் பல, சோழவந்தானுக்கு அண்மையிலுள்ள தென்கரை,3 தஞ்சை மன்னார்குடிக்கு அண்மையிலுள்ள பாமணி,4 அறையணி நல்லூர்5 திருநெல்வேலி6 முதலிய இடங்களிலும், ஆலால சுந்தரன் திருக்குகை யெனத் திருமணஞ்சேரி7யிலும் இருந்திருக்கின்றன. இப்பெயரையே சிறப்புடைய மக்கள் பலர், இராசேந்திரசோழ கேரள நிஷத ராஜனை ஆலாலசுந்தரப் பெருமாளான தப்பிலா வாசகன்8' என்றும், குன்றத்துார் திருமடவளாகத்திலிருக்கும் உடையாரான ஆலால சுந்தரர்9 என்றும், உடையான் ஆலால சுந்தரப்பெருமாள்' 10 என்றும் கொண்டிருந்தனர். மகளிருள்ளும் "மாணிக்கத்தின் மகள் மடப் பிள்ளையான ஆலால சுந்தரமாணிக்கம்"11 ' என்று பெயர் தாங்கியுள்ளனர்.

இனி, நம்பியாரூரர் திருகாவலூரினர் என்பது பற்றி, தன்னை ' "நாவலூரன்"12 என்று அவரே கூறுவதுண்டு. இதனால் இவரைச் சான்றோர் நாவலூருடையார் என்று பாராட்டினர்13 திருச்சிராப்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த சிவாலயத்திற் காணப்படும் கல்வெட்டுக்கள், நாவலூருடையான் காளிதாசன் திருச்சிற்றம்பலமுடையான் குலோத்துங்க சோழ உறந்தையரையன்" 14 என்றும் நாவலூருடையான் திருச்சிற்றம்பலமுடையான் கங்கைகொண்ட பிள்ளை 15என்றும் வணிகர் இருவரைக் கூறுகின்றன; வாட் போக்கி எனப்படும் இரத்தினகிரியிலுள்ள கல்வெட்டு, சிவபாத சேகரபுரத்து நாவலூருடையான்"16 என்ற பெய-


1. A. R. No. 22 of 1912. ​2. A. R. No. 309 of 1928-9. 3. A. R. No. 124 of 1910.
4. A. R. No. 169 of 1926. 5. A. R. No. 175 of 34-5. 6. S. I. I. Vol. V. No. 422.
7. A. R. No. 28 of 1914. 8. A. R. No. 42 of 1928-9. A. 9. A. R. No. 212 of 1930.
10.Travan.Arch.Vol.VI.No.14. 11. S.I.I. Vol. XII. No.196. 12. Joã. (35. 34:10.
13. S.I.I Vol.VIII. No.442. 14. A. R. No.47 of 1913. 15. A. R. No. 45 of 1913.
16. A. R. No. 145 of 1914.