பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

17

இதனைத் திட்டவட்டமாக முடிவு காண்பதில் அறிஞர்களிடையே ஒத்த முடிவு எய்திற்றிலதாயினும், இஃது ஐந்தாம் நூற்றாண்டினது என்பதில் வேறுபடுவார் இலர். இக்காலத்துப் பல்லவ வேந்தன் இரண்டாம் நரசிங்கவன்மனாவான். இதனை, உலோக விபாகம், “சகம் 380-ல் காஞ்சி வேந்தனை சிம்மவன்மன் காலத்தில்”[1] என்று குறிப்பதனால் தெளியலாம்.

பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் இச்சங்கத்தவரது வடமொழிப் புலமையில் பெருமதிப்புக்கொண்டிருந்தான். அவனும் சிறந்த வடமொழிப் புலவனாதலால், சங்கத்தின்பால் அவனுக்குப் பேரன்புண்டாயிற்றெனின் அது புனைவுரையாகாது. சங்கத்துச் சமண் சான்றோர்க்கும் அவன்பால் பேரன்புண்டாயிற்று. அவர்கள் மகிழ்வுற அவன் மத்த விலாச பிரகசனத்தை யெழுதியிருத்தல் கூடும். அக் காலத்தே மருணீக்கியார் தருமசேனரெனப் படுவதின் நீங்கிச் சைவரானதும், அவரைத் தொடர்ந்தே மகேந்திரவன்மன் சைவனானதும் இச்சங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயின. அப்போதைய சமணர்கள்பால் காணப்பட்ட குறைகளை நாவரசர் நாடெங்கும் சொல்லிப் பரப்புவாராயினர்; அவரோடு ஞானசம்பந்தரும் சேர்ந்து நாட்டில் சமண் சமயத்தை எதிர்த்துப் பாட்டாலும் உரையாலும் சமயப் பணி புரியலாயினர். சைவனாகிய முதன் மகேந்திரன் பாடலியிலிருந்த சமண்பாழிகளையழித்து, அதனால் கிடைத்த பொருளைக் கொண்டு திருவதிகையில் குணதரேச்சுரம் எனத் தன் பெயரால் சிவன் கோயிலொன்று கட்டினான். இவ்வகையால், பாடலியிலிருந்த சமண் சங்கம் ஒழிந்து போவதாயிற்று. சமண் சமயம் மக்களிடையே செல்வாக்கிழந்தது. சமண் சான் றோரும் குன்றுவராயினர்.

மைசூர் நாட்டில் வாழ்ந்த திகம்பர சமணர், “சமண் சங்கம் நான்கனுள் ஜினகாஞ்சியொன்று” என்று[2] குறித்-


  1. 1. Archeo. Rep. of Mysore. 1909-10. p. 45.
  2. 2. Intl. Ant. Vol. XXXII. p. 460.