பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

சேரமான்பெருமாள்

 இங்ங்னமே, மகளிர் மூவரிடையே நிகழ்ந்த சொல்லாடல் ஒன்றைச் சேரமான் புனைந்து உரைக்கின்றார் : ஒருத்தி, இறைவன் முதற்கண் காமனையே செற்றான் என்றாள் மற்றொருத்தி முதற்கண் செற்றது காலனையே என்றாள் : இரு வர்க்கும் இடையே பூசலுண்டாயிற்று ; அதனைத் தவிர்க்கக்கருதிய வேறொருத்தி இறைவனையே நோக்கி, முன்னம் செற்றது யாரை என்று கேட்டாள்; அவர் ஒரு விடையும் கூறாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்து நின்றார். இந் நிகழ்ச்சியை அவள் கூற்றிலே வைத்து, காமனை முன்செற்ற தென்ருள் அவள், இவள், காலன் என்னும் தாமநன் மார்பனை முன்செற்றது என்று தன் கையெறிந்தாள், நான் முனம் செற்றது அன்று யாரை யென்றேற்கு இருவர்க்கும் அஞ்சி ஆமெனக்கிற்றிலர் அன்று எனக் கிற்றிலுர் அந்தணரே "1[1]என இன்பமாகப் பாடியுள்ளார்.

இங்கிதப் பாட்டுக்கள் பாடுவதிலும் சேரமான் மிக்க நயம் சிறந்து விளங்குகின்றார். பலி வேண்டி வந்த இறை வனுக்கு அதனையிடச் சென்ற பெண்ணொருத்தி கூறுவது போல,

அந்தணராம்இவர்ஆரூர்உறைவது என்றேன். அதுவே சந்தணை தோளி என்றார், தலையாய சலவர் என்றேன் ; பந்தணை கையாய், அதுவும் உண்டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமின் என்றேன் துடிகொட்டினரே" '2[2] என்று கூறுகின்றார். இனி, திருவாரூர் மும்மணிக்கோவைக்கண் வரும் முப்பது பாட்டுக்களும் அகனைந்திணைக் குரியவாகவே உள்ளன. களவுவழி யொழுகிக் கற்புக் கடம்பூண்டு நிற்கும் தலைமக்கள் வாழ்வில், தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிரெனப்படுதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், கார்ப்பருவ வரவில் மீண்டும் வருவதாகக் கூறித் தலைமகளைத் தேற்றிச்செல்லு

1. பொன் வண். 45. ങ്ങ്. 46.


  1. பொன்வண்.45
  2. பொன் வண் 46