பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

சேரமான்பெருமாள்



பாடிய வண்டுறை கொன்றையிஞன் படப்பாம்புயிர்ப்ப ஒடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்தது ஆடியநீறு. அது கங்கையும் தெண்ணீர்யமுனேயுமே கூடிய கோப்பொத்ததால் உமைபாகம் கொற்றவற்கே '1 [1] என்பது அப்பாட்டு. இவ்வாறு பலபட வரும் இங்கிதப் பாட்டுக்கள் பலவும் இன்பச்சுவையேயன்றிச் சேரமா னுடைய பேரன்பையும் புலப்படுத்தி கிற்கின்றன. ஒருவர் திறமுடைய புலவராயின், அவர் வழங்கும் கருத்துக்களைப் பிறர் மேற்கொண்டு தம் புலமைச் செயலிடையே தொடுத்து இசைத்துப் பெருமை பிறங்கச் செய்வர் என்பது இலக்கிய ஆராய்ச்சியாளர் அறிந்ததொன்று. சேரமான் வழங்கிய கருத்துக்களை அவர்க்குப்பின் வந்த சான்றோர் பலர் மேற்கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்கள் பலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடிச் சேர்த்தவர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவரான பெருந்தேவனார் ; அவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனவும் கூறப்படுவர். அப்பெருந்தேவனார், நற்றிணைக்குப் பாடிய, "மாநிலம் சேவடி யாகத் து நீர் வளே குரல் பெளவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசை கையாகப் படர்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரியோனே :

என்ற பாட்டு நம் சேரமான்பாடிய, " பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஒங்கு ஒதம் உடுக்கை உயர் வான முடிவிசும்பே உடம்பு" வேதம் முகம் திசை தோள்


  1. பொன்.அந்.90