பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏனாதி சாத்தஞ் சாத்தனார்

289

பது அரசன் தானைவீரன் ஒருவன்பால் கொண்ட நன்மதிப்பை உணர்த்தி நிற்பது, ஏனாதிப் பட்டம் பெறுவார்க்கு அரசன் தன் பெயர் பொறித்த கணையாழி நல்குவன். சேனாபதிகள் அச்சிறப்புடையவரல்லர். "போர்க் கெல்லாம் தானாதி யாகிய தார்வேங்தன் மோதிரஞ் சேர், ஏனாதிப் பட்டத்திவன்”[1] எனவரும் பழம்பாட்டு ஏனாதியின் இயல்பைக் காட்டும். இவ்வாற்றால் ஏனாதி யென்னும் தமிழ்ச் சிறப்புப்பெயரை ஸேனாதி என்ற வழக்கில்லாத வட சொற்றிரிபு என்பதை அறிவுடையோர் கொள்ளார். இவ்வாறே சிலர், தூய தமிழ்ச் சொற்களை வடசொல் திரிபு எனச் சிறிதும் நாகூசாது பொய் கூறியும் எழுதியும் மகிழ்கின்றனர். அவர்களுடைய இத் தீச்செயல் தமிழிலிருந்து பிரித்துத் தெலுங்கு மலேயாளம் கன்னடம் என்ற மொழிகளைத் தோற்றுவித்து இன்று அவற்றைத் தனியுரிமையில்லாத அடிமை மொழிகளாக்கி விட்டதை மொழி நூலறிஞர் காட்டுகின்றனர் அவை, வடமொழி யறிவின்றி வளம்பெறும் தனியுரிமை இழந்து நிற்கின்றன. தமிழர், இனி, இத்தகைய வன்னெறிக்கு இடங்தரமாட்டார்கள். உரிமை வாழ்வின் சுவைகண்டவர் கழித்தொழித்த அடிமை வாழ்வை ஒருகாலும் விரும்பார் அன்றோ? ஒரு மொழியைப் பிறிதொரு மொழிக்கு அடிமைப்படுத்துவது, அம் மொழியைப் பேசும் மக்கள் உள்ளத்தை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியென்பதை உலக வரலாற்றறிவு வெளிப்படுத்தி விட்டது.


  1. தொல். பொ. புறத். 8. நச். மேற்கோள்.
SIV—19